Tuesday, January 9, 2024

சபரிமலை - புல்மேடு வழி

Thanks FB... 
சாமியே சரணம் ஐயப்பா
சபரிமலை - புல்மேடு வழி

என் இருபதாவது ஆண்டு சபரிமலை யாத்திரையும், நான் முதல் முதலாக பயணித்த சத்திரம் புல்மேடு வழியாக சபரிமலை வழி அனுபவத்தை தொடரில் குறிப்பிட விரும்புகிறேன். 

சத்திரம் வந்து இறங்கியவுடன் பக்தர்கள் அனைவரும் அங்கே இருக்கும் ஏதேனும் ஒரு கடையில் தேவைக்கேற்ப சாப்பிட்டுவிட்டு பிராயணத்தை ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் செல்லும் வழியில் தண்ணீர் மட்டுமே கிடைக்கும் என்பதை குறிப்பிடுகிறேன். 

பின்பு வன அலுவலர்கள் இடம் குழுவில் உள்ள நபர்களின் எண்ணிக்கை பதிவிட்டு பயணத்தை தொடர வேண்டும். அவர்கள் கொடுக்கும் பயணச்சீட்டை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். 

(இந்த சீட்டு புல் மேட்டு பகுதியிலும் மற்றும் இறுதி செக்போஸ்டிலும் கண்டிப்பாக தேவைப்படும்)  சோதனைக்கு உட்பட்ட பிறகு குழுவில் உள்ள அனைவரும் வந்து விட்டார்களா என சோதனை செய்த பிறகு அச் செக் போஸ்டை கடக்க  அனுமதிப்பார். 

*முதல் செக் போஸ்ட் ( சத்திரம் வனத்துறை சோதனை இடம்)*: இங்கே வன அலுவலர்கள் தப்பா நினைச்சீட்டில் உள்ளவாறு அனைவரும் இருக்கின்றன என்று சோதனைக்கு உட்பட்ட பிறகு, பிளாஸ்டிக் பொருட்கள் வைத்துள்ளார்களா இல்லையா என சோதனை செய்த பிறகு ஐயனின் புண்ணிய பூங்காவனத்திற்குள் அனுமதிக்கின்றனர். 

அங்கிருந்து  சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் அழுதாமலை போன்று மலைகளில் ஏறிச் செல்ல வேண்டும்.

 *இரண்டாவது செக் போஸ்ட் (சீதாகுலத் தாவளம்)* இவ்விடத்தில் வனத்துறையினரால் சூடான மூலிகை தண்ணீர் சில்வர் டம்ளரில் வைத்துள்ளனர். மற்றும் நாம் எடுத்த சென்ற சில்வர் பாட்டிலில் நம் தண்ணீர் நிரப்பி செல்லலாம். அவ்விடத்திலிருந்து சிறிது தூரம் சென்றடைந்த உடன் மருத்துவ வாகனத்தில் கை மற்றும் கால் வலிக்கு தேவையான *வலி நிவாரணிகளை தைலமாக தருகின்றனர்* இவ்விடத்திலிருந்து சமவெளி ஆரம்பிக்கின்றது. 

*மூன்றாவது செக் போஸ்ட் ( ஜீரோ பாயிண்ட் தாவளம்)* முன்பு குறிப்பிட்டது போலவே அனைத்து இடத்திலும் தண்ணீர் கிடைக்கும். 
இவ்விடத்தில் பக்தர்களுக்கு தேவையான தர்பூசணி கிடைக்கும். 

(மூன்றாவது செக் போஸ்ட் மற்றும் நான்காவது செக் போஸ்ட் , புல் மேடு உச்சி இடைப்பட்ட தூரத்தில் நாம் வனவிலங்குகளை காணலாம்.)

பின்பு  2 கிலோ மீட்டர் பிறகு *புல் மேட்டு தாவளம் எனப்படும் நான்காவது செக் போஸ்ட்* வந்தடைவோம். சரியாக ஆறாவது கிலோமீட்டரில் அமைந்துள்ளது. இங்கு பக்தர்களுக்கு தேவையான முதலுதவி சிகிச்சை மையம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. முதலில் வன அலுவலர்களிடம் பதிவு செய்த சீட்டை காண்பித்த பிறகு குழுவில் உள்ள அனைவரும் வந்த உடனே இந்த செக் போஸ்ட்டை கடக்க முடியும். 

நான்காவது செக் போஸ்ட் கடந்து ஒன்றை  கிலோமீட்டர் தூரம் கடந்த உடன் *புல் மேட்டு உச்சிக்கு* சென்று அடைந்தவுடன் அங்கிருந்து நம் கண்களுக்கு குளிர்ச்சியாக *_ஐயனின் சபரிமலையை காணலாம்_*. 

இவ்விடம் வரை சரியாக ஏழரை கிலோமீட்டர் தூரம் கடந்து இருப்போம் இந்த தூரத்தை நாம் நான்கு கிலோமீட்டர் ஏற்றத்தையும் மூணரை கிலோ மீட்டர் புல் மேடு சமதளப் பகுதிகளைக் கடந்து இருப்போம் இனி நாம் வரக்கூடிய ஐந்தரை கிலோமீட்டரையும் இறக்கத்தில் மட்டுமே இறங்க வேண்டும். 

*ஐந்தாவது செக் போஸ்ட் ( கழுதைக்குழி தாவளம் )*
புல் மேட்டில் இருந்து இறங்க ஆரம்பித்து இரண்டாவது கிலோமீட்டரில் அமைக்கப்பட்ட மூலிகை தண்ணீர் மற்றும்  எலுமிச்சை சர்பத்/சோடா கிடைக்கும். 

இவ்விடத்தில் ஐயப்ப பக்தர்கள் தவிர கூர்ந்து தேவையானவற்றை தண்ணீரை தத்தம் கொண்டு வந்துள்ள வாட்டர் பாட்டிலில் நிரப்பி கொள்ள வேண்டும். 

அடுத்து வரும் 3.5 கிலோமீட்டர் ஓட்றையடி பாதை போல இருக்கும், இந்த தூரம் கரிமலை இறக்கத்தை காட்டிலும் இது சற்றே கடினமானதாக இருக்கும். 

*ஆறாவது செக் போஸ்ட் / இறுதியாக 13 வது கிலோமீட்டரில்* இறுதி செக் போஸ்டில் வனத்துறையினால் கொடுக்கப்பட்டிருந்த அந்த சீட்டை காண்பித்து குழுவில் உள்ள அனைவரும் வந்துவிட்டார்களா என்று சரி பார்த்த பிறகு அச் செக்  போஸ்ட்டை கடக்க அனுமதிப்பர். 

அவ்விடத்தில் வனத்துறையினர் அமைக்கப்பட்டுள்ள மூலிகை தண்ணீர் கிடைக்கும், இலவச குளியலறை மற்றும் கழிப்பறை உள்ளது. 

இங்கிருந்து ஒரு கிலோ மீட்டரில் தூரத்தில் சபரிமலை சன்னிதானம் உள்ளது. 

சத்திரம் - புல்மேடு - சபரிமலை தூரம் சரியாக 14 கிலோமீட்டர். 

இப்பாதையில் பயணிக்க உள்ள பக்தர்கள் தேவையான உணவுகளை பிளாஸ்டிக் அல்லாத பொருட்களால் எடுத்துக்கொண்டு செல்லவும், மேலும் தேவைப்படுவோர் சத்திரம் அருகே ஊனுகோல் விற்கப்படுகின்றன அதை கண்டிப்பாக தேவைக்குடையோர் வாங்கிச் செல்லவும் ஏனென்றால் கடைசி ஐந்தரை கிலோமீட்டர் இறங்குபாதையில் உள்ளது. 

புல் மேட்டு உச்சி முதல் சன்னிதானம் வரை உள்ள பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதி என்பதால் வயதானவர்கள் மற்றும் உடல் உபாதை உள்ளவர்கள் இப்பாதையில் பின் தொடர சற்று தேவைப்படும் உபகரணங்களை எடுத்துச் செல்லவும். 

சன்னிதானம் வந்தவுடன் நடப்பந்தலில் மூன்று மணி நேரம் (நேரம் கூட்டத்தைப் பொறுத்து மாறுபடும்) காத்திருந்து பொண்ணு பதினெட்டாம் படி மேல் ஏறி ஐயன் ஐயப்பனை காண கண் கோடி வேண்டும்..!!

No comments:

Post a Comment