Sunday, March 10, 2024

கன்னி தெய்வ வழிபாடு

Thank fb

🙏🔱💥உங்க வீட்டுல ஒரு கன்னி தெய்வம் இருக்குப்பா!?அதை கையெடுத்துக் கும்பிடு! எல்லாம் சரியாகப் போய்விடும்! என்று சொல்லக் கேட்டிருப்போம்! அந்த கன்னி தெய்வத்தைப் பற்றி  பார்ப்போமா!?

🙏🔱💥கன்னி தெய்வ வழிபாடு!

🔱💥ஒரு பெண் இந்த உலகில் தோன்றி மனம் முடிக்காமல் கன்னியாக மறைந்தால்! அவளை வழிபடும் பண்பாடு நம் கிராமங்களில் தொடர்ந்து வருகிறது.

🔱💥பெண்களை தெய்வமாக வழிபடும் வழக்கம் நமது இந்திய தேசத்தில் பழங்காலத்தில் இருந்தே தொன்று தொட்டு நடந்து வருகிறது. 

🙏🔱💥சத்தி வழிபாடு என்பது
 தாய்வழி வழிபாடுதான். 

🔱💥மிக பிரபலமாக கன்னி தெய்வங்கள் போற்றப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு.

🔱💥இன்பத்தை கருவாக்கி,உருவாக்கி உலகத்திற்கு வழங்குபவள் பெண். உயிருக்குள் உயிர் சுமந்து மனித குலத்தை விருத்தி அடையச் செய்தவளும் பெண்தான். 

🔱💥இந்த காரணத்தினாலேயே பெண்ணை மகாசத்தியாகப் பார்த்திருக்கிறான் ஆதிமனிதன். 

🔱💥தன்னைவிட பலம் குன்றிய பெண்ணைப் பார்த்து பயந்திருக்கிறான். 
அவளைக் கையெடுத்துக் கும்பிட்டிருக்கிறான்.

 🔱💥அந்தப் பழங்கால மரபுக்கும் வரலாறுக்கும் இன்றும் நிலவும் சான்றுதான் தமிழர்களின்.... "கன்னி தெய்வ வழிபாடு".

🔱💥ஒரு பெண் இந்த உலகில் தோன்றி மனம் முடிக்காமல் கன்னியாக மறைந்தால்! அவளை வழிபடும் பண்பாடு நம் கிராமங்களில் தொடர்ந்து வருகிறது.

🔱💥இந்தக் கன்னிகள் பெரும்பாலும் தங்களின் சராசரி வாழ்வைத் தவற விட்டவர்கள். 
அல்லது துச்சமாகத் தூக்கியெறிந்தவர்கள். 

🔱💥கன்னித்தன்மையைக் கொடுத்து தாய்மையைப் பரிசாகப் பெறாமலேயே இறந்தவர்கள். 

🔱💥இதனாலேயே சராசரி பெண்கள் வணங்கும் தெய்வ நிலைக்கு உயர்ந்து விடுகிறார்கள்.

🔱💥சுமங்கலிகள் கன்னி தெய்வங்களை வழிபட்டால் 
தாலி பலம் அதிகரிக்கும். 

🔱💥கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் யோகம் கைகூடும் என்று பொதுவான நம்பிக்கை இருப்பதாலே கன்னியை வணங்கும் வழக்கம் கிராமத்தில் துவங்கி பட்டணம் வரை தொடர்ந்து வருகிறது.

🔱💥இந்த தெய்வங்களுக்கு ஆடி மற்றும் தை மாதங்களில் சிறப்பான பூசைகள் செய்வது வழக்கம். 

🔱💥பெரும்பாலும் எல்லா நாட்களும் கன்னி தெய்வத்திற்கு ஏற்ற நாளே!.எனவே எந்த நாட்களிலும் வணங்கலாம். மேற்கண்ட மாதங்களில் வணங்க முடியாதவர்கள் தை மாதம் இரண்டாம் நாளில் கன்னிக்கு பூசை வைத்து வணங்குவார்கள். 

🔱💥தங்கள் குலதெய்வத்தினை பங்குனி உத்திரத்தில் வணங்கும் போது கூட மறவாமல் வீட்டில் உள்ள கன்னிகளையும் வணங்கும் வழக்கம் நம் நாட்டில் காணப்படுகிறது.

🔱💥பொதுவாக ஒரு வீட்டின் திசைகளைக் கன்னி மூலை, நெருப்பு மூலை, வாயு மூலை, ஈசான மூலை என பிரித்துக் கூறுவதுண்டு. 

🔱💥அதில், வடகிழக்கு மூலை இறைவனுக்குரிய ஈசான மூலை என்றால், தென்மேற்கு மூலை கன்னி தெய்வத்துக்குரிய கன்னி மூலை என தனி மூலை இருப்பதே... கன்னி வழிபாட்டின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் விதமாக உள்ளது. 

🔱💥பெரும்பாலும் இறைவழிபாட்டுக்கு இணையான வழிபாடாக கன்னி தெய்வ வழிபாடுகள் போற்றப்படுகின்றன.

🔱💥தமிழர் குடும்பங்களில் நோயாலோ, விபத்தாலோ மடிந்து விட்ட கன்னியரை தெய்வமாகக் கருதி வணங்குகின்றனர்.

🔱💥குடும்ப ஒற்றுமைக்கு கன்னிதெய்வ வழிபாடு முக்கிய பங்கு வகிக்கிறது. 

🔱💥குடும்பத்தில் பலருக்குள் கருத்துவேறுபாடுகள்  இருந்தாலும் கூட கன்னிதெய்வத்தை  வணங்க அனைவரும் ஒன்றாக கூடிவிட வேண்டும். 

🔱💥இது குடும்பத்தில் எழுதப்படாத சட்டமாகும். 
ஏன்!? என்றால்! குடும்ப ஒற்றுமை தான் கன்னிக்கு மிக பிடிக்கும். 

🔱💥அனைவரும் குடும்பத்தோடு நின்று வணங்கினால் கன்னி தெய்வத்தின்  மனம் குளிர்ந்து அருளை வழங்கி விடும்.

🔱💥இறந்த பெண் வயதுக்கு ஏற்ப அவர்களுக்கு உடை எடுத்து வைப்பார்கள். 

🔱💥சிறுமிகளுக்கு அதற்கேற்ற ஆடைகளும், இளம் பெண்ணுக்கு பாவாடை சட்டை தாவணியும், அதை விட பெரிய பெண்ணுக்கு சேலை சட்டையும் வாங்கி வைத்து வணங்குவார்கள்.

🔱💥அந்திக் கருக்கலில் கன்னியை வணங்க துவங்குகிறார்கள். 

🔱💥இளநார்பெட்டி ஒன்றில் மஞ்சள் கிழங்கு, சிற்றாடை அல்லது சேலை, கண்ணாடி, சீப்பு, வளையல் வைத்து, பிச்சிப்பூ அல்லது மரிக்கொழுந்து படைத்து, சாம்பிராணி மணத்தை வீடு முழுவதும் நிரப்பி, முற்றத்தில் நீர் தெளித்து கன்னியை வரவேற்று வழிபடுகிறார்கள். 

🔱💥இந்த நார்ப்பெட்டிக்கு 
கன்னிதெய்வப்பெட்டி என்று பெயர்.

🔱💥கன்னிதெய்வப் பெட்டியை வைக்கும்போது பெரும்பாலும் அந்தக் குடும்பத்தில் உள்ள பூப்படைந்த பெண்ணுக்கு அருள் வந்து மூச்சிரைக்கும். 

🔱💥அவரிடம் தங்களது குறைகளை முறையிட்டு தீர்க்குமாறு பணிவோடு
குடும்பத்தினர் வேண்டுவர். 

🔱💥தன்னை மறக்காமல் வழிபட்டால் துயரத்தைப் போக்கி குடும்பத்தை தழைத்தோங்கச் செய்வதாக அவரிடமிருந்து அருள்வாக்கு கும்பிடுபவர்களுக்கு கிடைக்கும். 

🔱💥பின்னர் கன்னி மூலையில் உயரமான இடத்தில் இளநார்பெட்டியை வைத்து விடுவார்கள்.

🔱💥முதலாண்டு வைத்து படைத்த கன்னிதெய்வப் பெட்டியை மறு ஆண்டுதான் எடுப்பார்கள். 

🔱💥கன்னிதெய்வப் பெட்டியை அதிகாலையில் எடுக்கும் போது வீட்டை சுத்தம் செய்வார்கள். 

🔱💥கன்னிதெய்வப் பெட்டியைத் திறக்கும் போது, அதில் கடந்த ஆண்டு வைத்த மஞ்சள் முளை விட்டிருந்தால், கன்னி தெய்வம் துடியாக இருப்பதாக நம்பிக்கை. 

🔱💥அதற்குள் வைத்திருந்த துணியை குடும்பத்தில் உள்ள பெண்ணுக்கு உடுத்தக் கொடுப்பார்கள். 

🔱💥இந்தக் கன்னிப் பொங்கல் தமிழகத்தின் பல பகுதிகளில் அவரவர்கள் பாணிக்கு ஏற்ப கொண்டாடப்பட்டு வருகிறது.

🔱💥துணியை தனது வீட்டில் மணமாகாத பெண்ணுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். 

🔱💥அவர்கள் திருமணம் முடித்து சென்று விட்டால்வேறு வீட்டுப் பெண். எனவே! அவர்களுக்கு கன்னிக்கு கும்பிட்ட துணி கிடைக்காது.

🔱💥 வீட்டுக்கு வந்த மருமகளுக்கு கன்னிக்கு வணங்கிய துணியை கொடுக்கலாம். 

🔱💥ஏன்? என்றால்! அவர் அந்த குடும்பத்தின் பெண். தனது பொருள் கூட தனது குடும்பத்தில் வசிக்கும் ஒருவருக்கே கிடைக்க வேண்டும் என்று கன்னி தெய்வங்களின் எழுதப்படாத சட்டம்.

🔱💥குடும்ப ஓற்றுமைக்கு இந்த கன்னிதெய்வ வழிபாடு ஒரு சான்றாகும். 

🔱💥இன்றைய நவீன யுகத்தில் ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களும் பொருள் தேட திரைகடல் தாண்டி தேடி ஓடி விடுகிறார்கள். 

🔱💥எப்போதாவது கல்யாணம், கோயில், கொடை என்றால் கூட அவர்கள் ஒன்று சேருவது கடினம்.

 🔱💥ஆனால்! கன்னி தெய்வ வழிபாடு குடும்ப உறுப்பினர்களை ஒன்று சேர்க்கும் வழிபாடாகும்.

 🔱💥குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்துதான் படையல் தயார் செய்யவேண்டும்.

🔱💥பெரும்பாலும் பனியாரம், அதிரசம் என இனிப்பு பலகாரம் கன்னிதெய்வங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

 🔱💥எனவே படையலில் நிச்சயம் பனியாரம், அதிரசம் என இனிப்பு வகைகள் கண்டிப்பாக இடம் பெறும்.

 🔱💥அதன் பின் வடை பாயாசத்துடன் அனைவரும் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடுவார்கள். 

🔱💥குடும்ப தலைவி அனைவருக்கும் பரிமாறிவிட்டு தானும் ஒரு இடத்தில் இலையை போட்டு அனைவருடன் அமர்ந்து சாப்பிடுவார்கள்.

 🔱💥இந்த சமபந்தி விருந்து கன்னி தெய்வ வழிபாட்டில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

🔱💥இந்த வழிபாட்டிற்காகவே வருடத்துக்கு ஒரு முறை தனது குடும்பத்தினரை ஒன்று சேர்த்துவிடுகிறாள். 

🔱💥உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் உறவை தேடி ஓடி வருகிறார்கள். 

🔱💥பெரும்பாலுமே ஒரு பெண்ணுக்கு எப்போதுமே தான் பிறந்த வீட்டின் மீது பற்று உண்டு. 

🔱💥இதுபோன்ற கன்னிதெய்வங்களுக்கும் அதுபோலதான் ஆசை. 

🔱💥தன் வீட்டில் அண்ணன், தம்பி என்று உறவு முறைகள் அனைவரும் ஒன்றாக நின்று தம்மை வணங்க வேண்டும்! என ஆசைப்படுவாள். 

🔱💥அப்படி வணங்கும் போது மனம் குளிர்ந்து அவர்களுக்கு வேண்டும் வரம் கொடுப்பாள். 

🔱💥இப்போது பல மாநிலங்களில் வசிப்பவர்கள், தங்கள் இடத்துக்கே கன்னிதெய்வப் பெட்டியை கொண்டு சென்று வைத்து வணங்கி வருகிறார்கள்.

🔱💥பெரும்பாலுமே ஒரு கன்னி ஒரு வீட்டில் துடியாக இருக்கிறார் என்றால் அவ்வீட்டில் செய்வினை கோளாறு நீங்கி விடும். பேய், பிசாசு அண்டாது.

 🔱💥நோய் நொடிகள் தீர்ந்து விடும். 

🔱💥பிறந்த குழந்தை திடீர் திடீரென அழுதால் கூட கன்னிதெய்வத்திற்கு பூசை வைக்கவில்லை! என்றும், கன்னி தெய்வம் பயங்காட்டுகிறது என கிராமத்தில் பெரியவர்கள் சொல்லுவதை தற்போதும் காணலாம்.

🔱💥கன்னிதெய்வம் தன் தேவைகளை குழந்தை மூலமாக பூர்த்தி செய்து கொள்கிறது என்றும் சொல்வார்கள்.

🔱💥குழந்தைகளுக்கு கல்வி செல்வம் கிடைக்கவும் கன்னிதெய்வத்தை வணங்கும் வழக்கம் உள்ளது. 

🔱💥ஒருவர் தனது வீட்டில் கன்னி தெய்வம் இருந்து அவர்களை வணங்கிவிட்டு வேறு எந்த தெய்வத்தை  வணங்கினாலும் சிறப்பு என்பது பெரியோர்களின் பொதுவான கருத்து.

🔱💥கன்னிதெய்வங்களின் கதை பலவாறாகப் பேசப்பட்டு வருகிறது. அதில் பல கதை மனதை உருக்குவதாகவே உள்ளது. 

🔱💥ஒரு குடும்பத்தில் தாய்க்கு தலைமகளாய் இருந்த சிறுமி ஒருவர் இறந்து விட்டாள். 

🔱💥வருடம் தோறும் இறந்த அந்த பெண்ணுக்கு பாவடை சட்டை எடுத்து வைத்து கும்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். 

🔱💥23 வருடங்கள் கழிந்தது.

 🔱💥ஒரு நாள் அந்த பெண் தாயின் கனவில் தோன்றி, ‘தாயே.. எனக்கு 23 வயதாகி விட்டது.. இன்னும் எனக்கு பாவடை சட்டைதானா... போதவில்லையே’ என கண்ணீர் மல்க கேட்க அந்த ஆண்டு முதல் அவளுக்கு சேலை சட்டை வாங்கி வைத்து வணங்க ஆரம்பித்தனர். 

🔱💥அந்த அளவுக்கு கன்னிதெய்வம் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக மறைந்து வாழும் குழந்தையாகவே வணங்கப்படுகிறது.

🔱💥ஒரு வீட்டில் கன்னி தெய்வத்தினை வணங்கவே மறந்து விட்டனர். அவ்வீட்டில் பிறந்த குழந்தை தினமும் இரவு பயந்து அழுது கொண்டே இருந்தது. 

🔱💥ஒரு நாள் வைத்தியர் ஒருவர் உங்கள் கன்னி தெய்வத்தை வணங்குங்கள் எல்லாம் சரியாகி விடும் என கூற, கன்னியை வணங்கி கன்னிமூலையில் குழந்தையை கிடத்தி எடுத்த பிறகு அழுகை நின்று விட்டதாம்.

🔱💥இதுபோல் கன்னி தெய்வங்கள் இந்த நவீன காலத்திலும் வழிபடும் தெய்வமாக விளங்கி வருகிறது.

🔱💥பல அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்து கொண்டிருக்கிறது.

🔱💥தற்போது பனை தொழில் 
முழுவதும் குன்றி விட்டது. 

🔱💥நார் பெட்டி போன்ற பொருள்கள் காட்சிப் பொருளாக மாறிவிட்டது.

 🔱💥நவீன காலத்தில் கன்னிதெய்வ நார் பெட்டி மட்டும் தாயரிக்கும் பணி நடந்து வருகிறது. 

🔱💥பல கிராமங்களில் பல வீடுகளில் இந்த நார் பெட்டி 
பல வண்ணத்தில் தொங்கி கொண்டிருப்பதை நாம் இப்போதும் காணலாம். 

🔱💥பழமையை பறைசாற்றும் இந்த கன்னி தெய்வ வழிபாடு, 
பல வரலாறுகளை சுமந்து கொண்டு தமிழரின் பண்பாட்டை இன்றும் பறைசாற்றிக் கொண்டு தான் இருக்கிறது.

🔱💥இந்துக்களே! இந்துவேத அருளூறு, அமுதத் தெய்வீகத் தமிழில் உங்கள் இல்லத்து மற்றும் தொழில்கூட யாகம், பூசை, இல்லத்து அனைத்து வகையான சமய,சமுதாய விழாக்களுக்கும், 
& கோயில் விழாக்களுக்கும், கோயில் யாகம், பூசைகள்,  கோயில் குடமுழுக்கு, கோயில் உயிர்ப்பு, புத்துயிர்ப்பு பூசைகளுக்கும் தொடர்புகொள்ள...
சித்தர் திருவாக்கியார் FB
🙏🔱💥🙏🔱💥🙏🔱💥🙏🔱💥🙏

Tuesday, January 9, 2024

சபரிமலை - புல்மேடு வழி

Thanks FB... 
சாமியே சரணம் ஐயப்பா
சபரிமலை - புல்மேடு வழி

என் இருபதாவது ஆண்டு சபரிமலை யாத்திரையும், நான் முதல் முதலாக பயணித்த சத்திரம் புல்மேடு வழியாக சபரிமலை வழி அனுபவத்தை தொடரில் குறிப்பிட விரும்புகிறேன். 

சத்திரம் வந்து இறங்கியவுடன் பக்தர்கள் அனைவரும் அங்கே இருக்கும் ஏதேனும் ஒரு கடையில் தேவைக்கேற்ப சாப்பிட்டுவிட்டு பிராயணத்தை ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் செல்லும் வழியில் தண்ணீர் மட்டுமே கிடைக்கும் என்பதை குறிப்பிடுகிறேன். 

பின்பு வன அலுவலர்கள் இடம் குழுவில் உள்ள நபர்களின் எண்ணிக்கை பதிவிட்டு பயணத்தை தொடர வேண்டும். அவர்கள் கொடுக்கும் பயணச்சீட்டை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். 

(இந்த சீட்டு புல் மேட்டு பகுதியிலும் மற்றும் இறுதி செக்போஸ்டிலும் கண்டிப்பாக தேவைப்படும்)  சோதனைக்கு உட்பட்ட பிறகு குழுவில் உள்ள அனைவரும் வந்து விட்டார்களா என சோதனை செய்த பிறகு அச் செக் போஸ்டை கடக்க  அனுமதிப்பார். 

*முதல் செக் போஸ்ட் ( சத்திரம் வனத்துறை சோதனை இடம்)*: இங்கே வன அலுவலர்கள் தப்பா நினைச்சீட்டில் உள்ளவாறு அனைவரும் இருக்கின்றன என்று சோதனைக்கு உட்பட்ட பிறகு, பிளாஸ்டிக் பொருட்கள் வைத்துள்ளார்களா இல்லையா என சோதனை செய்த பிறகு ஐயனின் புண்ணிய பூங்காவனத்திற்குள் அனுமதிக்கின்றனர். 

அங்கிருந்து  சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் அழுதாமலை போன்று மலைகளில் ஏறிச் செல்ல வேண்டும்.

 *இரண்டாவது செக் போஸ்ட் (சீதாகுலத் தாவளம்)* இவ்விடத்தில் வனத்துறையினரால் சூடான மூலிகை தண்ணீர் சில்வர் டம்ளரில் வைத்துள்ளனர். மற்றும் நாம் எடுத்த சென்ற சில்வர் பாட்டிலில் நம் தண்ணீர் நிரப்பி செல்லலாம். அவ்விடத்திலிருந்து சிறிது தூரம் சென்றடைந்த உடன் மருத்துவ வாகனத்தில் கை மற்றும் கால் வலிக்கு தேவையான *வலி நிவாரணிகளை தைலமாக தருகின்றனர்* இவ்விடத்திலிருந்து சமவெளி ஆரம்பிக்கின்றது. 

*மூன்றாவது செக் போஸ்ட் ( ஜீரோ பாயிண்ட் தாவளம்)* முன்பு குறிப்பிட்டது போலவே அனைத்து இடத்திலும் தண்ணீர் கிடைக்கும். 
இவ்விடத்தில் பக்தர்களுக்கு தேவையான தர்பூசணி கிடைக்கும். 

(மூன்றாவது செக் போஸ்ட் மற்றும் நான்காவது செக் போஸ்ட் , புல் மேடு உச்சி இடைப்பட்ட தூரத்தில் நாம் வனவிலங்குகளை காணலாம்.)

பின்பு  2 கிலோ மீட்டர் பிறகு *புல் மேட்டு தாவளம் எனப்படும் நான்காவது செக் போஸ்ட்* வந்தடைவோம். சரியாக ஆறாவது கிலோமீட்டரில் அமைந்துள்ளது. இங்கு பக்தர்களுக்கு தேவையான முதலுதவி சிகிச்சை மையம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. முதலில் வன அலுவலர்களிடம் பதிவு செய்த சீட்டை காண்பித்த பிறகு குழுவில் உள்ள அனைவரும் வந்த உடனே இந்த செக் போஸ்ட்டை கடக்க முடியும். 

நான்காவது செக் போஸ்ட் கடந்து ஒன்றை  கிலோமீட்டர் தூரம் கடந்த உடன் *புல் மேட்டு உச்சிக்கு* சென்று அடைந்தவுடன் அங்கிருந்து நம் கண்களுக்கு குளிர்ச்சியாக *_ஐயனின் சபரிமலையை காணலாம்_*. 

இவ்விடம் வரை சரியாக ஏழரை கிலோமீட்டர் தூரம் கடந்து இருப்போம் இந்த தூரத்தை நாம் நான்கு கிலோமீட்டர் ஏற்றத்தையும் மூணரை கிலோ மீட்டர் புல் மேடு சமதளப் பகுதிகளைக் கடந்து இருப்போம் இனி நாம் வரக்கூடிய ஐந்தரை கிலோமீட்டரையும் இறக்கத்தில் மட்டுமே இறங்க வேண்டும். 

*ஐந்தாவது செக் போஸ்ட் ( கழுதைக்குழி தாவளம் )*
புல் மேட்டில் இருந்து இறங்க ஆரம்பித்து இரண்டாவது கிலோமீட்டரில் அமைக்கப்பட்ட மூலிகை தண்ணீர் மற்றும்  எலுமிச்சை சர்பத்/சோடா கிடைக்கும். 

இவ்விடத்தில் ஐயப்ப பக்தர்கள் தவிர கூர்ந்து தேவையானவற்றை தண்ணீரை தத்தம் கொண்டு வந்துள்ள வாட்டர் பாட்டிலில் நிரப்பி கொள்ள வேண்டும். 

அடுத்து வரும் 3.5 கிலோமீட்டர் ஓட்றையடி பாதை போல இருக்கும், இந்த தூரம் கரிமலை இறக்கத்தை காட்டிலும் இது சற்றே கடினமானதாக இருக்கும். 

*ஆறாவது செக் போஸ்ட் / இறுதியாக 13 வது கிலோமீட்டரில்* இறுதி செக் போஸ்டில் வனத்துறையினால் கொடுக்கப்பட்டிருந்த அந்த சீட்டை காண்பித்து குழுவில் உள்ள அனைவரும் வந்துவிட்டார்களா என்று சரி பார்த்த பிறகு அச் செக்  போஸ்ட்டை கடக்க அனுமதிப்பர். 

அவ்விடத்தில் வனத்துறையினர் அமைக்கப்பட்டுள்ள மூலிகை தண்ணீர் கிடைக்கும், இலவச குளியலறை மற்றும் கழிப்பறை உள்ளது. 

இங்கிருந்து ஒரு கிலோ மீட்டரில் தூரத்தில் சபரிமலை சன்னிதானம் உள்ளது. 

சத்திரம் - புல்மேடு - சபரிமலை தூரம் சரியாக 14 கிலோமீட்டர். 

இப்பாதையில் பயணிக்க உள்ள பக்தர்கள் தேவையான உணவுகளை பிளாஸ்டிக் அல்லாத பொருட்களால் எடுத்துக்கொண்டு செல்லவும், மேலும் தேவைப்படுவோர் சத்திரம் அருகே ஊனுகோல் விற்கப்படுகின்றன அதை கண்டிப்பாக தேவைக்குடையோர் வாங்கிச் செல்லவும் ஏனென்றால் கடைசி ஐந்தரை கிலோமீட்டர் இறங்குபாதையில் உள்ளது. 

புல் மேட்டு உச்சி முதல் சன்னிதானம் வரை உள்ள பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதி என்பதால் வயதானவர்கள் மற்றும் உடல் உபாதை உள்ளவர்கள் இப்பாதையில் பின் தொடர சற்று தேவைப்படும் உபகரணங்களை எடுத்துச் செல்லவும். 

சன்னிதானம் வந்தவுடன் நடப்பந்தலில் மூன்று மணி நேரம் (நேரம் கூட்டத்தைப் பொறுத்து மாறுபடும்) காத்திருந்து பொண்ணு பதினெட்டாம் படி மேல் ஏறி ஐயன் ஐயப்பனை காண கண் கோடி வேண்டும்..!!

Monday, March 27, 2023

51 சக்தி பீடங்களை

51 சக்தி பீடங்களை பற்றி பலவிதமான மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை திருவாவடுதுறை ஆய்வுமையத்தில் கூறப்பட்டவாறு காட்டப்பட்டுள்ளது.

Thank to fb

01) முதல் சக்திபீடம் ~ *அட்டஹாஸம்., மேற்கு வங்காளம்*

விழுந்த அங்கம் ~ *கீழ்உதடு*

விழுந்தஇடம் ~ *அட்டஹாஸம் அஹ்மத்பூர் - காட்வா பாதையருகில் - லாப்பூர்*

தேவியின் பெயர் ~ *புல்லரா*

பைரவர் பெயர் ~ *விஸ்வேஸ பைரவர்*

02) இரண்டாம் சக்திபீடம் ~ *உத்கலம் பீஹார்*

விழுந்த அங்கம் ~ *தொப்புள்*

விழுந்த இடம் ~ *உத்கலபீடம் ஹவுரா - வால்டேர் வழியில் குர்தா ரோடு வழியே பூரி*

தேவியின் பெயர் ~ *விமலா*

பைரவர் பெயர் ~ *ஜகந்நாத பைரவர்*

03)மூன்றாம் சக்திபீடம் ~ *உஜ்ஜெயின்*

விழுந்த அங்கம் ~ *இடது முழங்கை*

விழுந்த இடம் ~ *உஜ்ஜெயின் ஹரஸித்தி தேவி ஆலயம் - சிப்பரா நதிக்கரை - ( மத்தியப்பிரதேசம் )*

தேவியின் பெயர் ~ *மாங்கல்ய சண்டிகா*

பைரவர் பெயர் ~ *கபிலாம்ப பைரவர்*

04) நான்காம் சக்திபீடம் ~ *முக்திநாத்., நேபாளம்*

விழுந்த அங்கம் ~ *வலது கன்னம்*

விழுந்த இடம் ~ *கண்டகீ நதிக்கரை - முக்திநாத் - ( நேபாளம் )*

தேவியின் பெயர் ~ *கண்டகீ சண்டீ*

பைரவர் பெயர் ~ *சக்ரபாணி பைரவர்*

05) ஐந்தாம் சக்திபீடம் ~ *கன்னியாகுமரி., தமிழ்நாடு*

விழுந்த அங்கம் ~ *முதுகு*

விழுந்த இடம் ~ *கன்னியாகுமரி ( தமிழ்நாடு )*

தேவியின் பெயர் ~ *சர்வாணீ*

பைரவர் பெயர் ~ *நிமிஷ பைரவர்*

06) ஆறாம் சக்திபீடம் ~ *பவானிபூர்., பங்களாதேஷ்*

விழுந்த அங்கம் ~ *வலதுகால் பெருவிரல்*

விழுந்த இடம் ~ *பவானிபூர் பூதாத்ரீ ஆலயம் ( பங்களாதேஷ் )*

தேவியின் பெயர் ~ *அபர்ணா*

பைரவர் பெயர் ~ *க்ஷீரகண்ட பைரவர்*

07) ஏழாம் சக்திபீடம் ~ *கர்ணாட் (கோகர்ணம்., கர்நாடகா)*

விழுந்த அங்கம் ~ *காதுகள்*

விழுந்த இடம் ~ *கர்ணாட் (கோகர்ணம்., கர்நாடகா)*

தேவியின் பெயர் ~ *ஜயதுர்க்கா*

பைரவர் பெயர் ~ *அபீரு பைரவர்*

08) எட்டாம் சக்திபீடம் ~ *அமர்நாத்., ஜம்மு-காஷ்மீர்*

விழுந்த அங்கம் ~ *கழுத்தின் மேல்பகுதி*

விழுந்த இடம் ~ *அமர்நாத் குகை ( உள்ளே பனியிலான சக்திபீடம் ) ஜம்மு-காஷ்மீர்*

தேவியின் பெயர் ~ *மஹாமாயா*

பைரவர் பெயர் ~ *த்ரிஸந்த்யேஸ்வர பைரவர்*

09) ஒன்பதாம் சக்திபீடம் ~ *காமாக்யா.,கௌஹாத்தி., அஸ்ஸாம்*

விழுந்த அங்கம் ~ *யோனி*

விழுந்த இடம் ~ *காமாக்யா ( பிரம்மபுத்ரா நதிக்கரை ) கௌஹாத்தி - அஸ்ஸாம்*

தேவியின் பெயர் ~ *காமா*

பைரவர் பெயர் ~ *உமாநந்த பைரவர்*

10) பத்தாம் சக்திபீடம் ~ *கல்கத்தா., மேற்கு வங்கம்*

விழுந்த அங்கம் ~ *வலதுகால் விரல்கள் ( கட்டை விரலைத் தவிர )*

விழுந்த இடம் - *கல்கத்தா காளீ கோவில் ( மேற்கு வங்காளம் )*

தேவியின் பெயர் - *காளீகா தேவீ*

பைரவர் பெயர் - *நகுலீச பைரவர்*

11) பதினோராம் சக்திபீடம் ~ *காஞ்சிபுரம்., தமிழ்நாடு*

விழுந்த அங்கம் ~ *எலும்புகள்*

விழுந்த இடம் ~ *காமாக்ஷி கோவிலுக்கும் கந்தக்கோட்டத்திற்கும் இடையேயுள்ள மகாகாளீ கோவில் - காஞ்சிபுரம் - தமிழ்நாடு*

12) பனிரெண்டாம் சக்திபீடம் ~ *பூரி., ஒடிஸா*

விழுந்த அங்கம் ~ *இடுப்பின் வலதுபக்கம்*

விழுந்த இடம் ~ *நீலமாதவன் கோவில் ( பூரி ஜகந்நாதர் கோவில் அருகில் ) பூரி - ஒடிஸா*

தேவியின் பெயர் ~ *காலீ*

பைரவர் பெயர் ~ *அஸிதாங்க பைரவர்*

13) பதிமூன்றாம் சக்திபீடம் ~ *ஹவுரா., மேற்கு வங்காளம்*

விழுந்த அங்கம் ~ *அன்னையின் கிரீடம்*

விழுந்த இடம் ~ *ஹவுரா - பர்ஹர்வா பாதையில் அஜீம்கஞ்ச் என்ற இடத்திலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ள பட்நகர் என்ற சிற்றூரில் கங்கைநதிக்கரை தேவி ஆலயம்*

தேவியின் பெயர் ~ *விமலா*

பைரவர் பெயர் ~ *சம்வர்த்த பைரவர்*

14) பதினான்காம் சக்திபீடம் ~ *குருக்ஷேத்ரம்., ஹரியானா*

விழுந்த அங்கம் ~ *வலது கணுக்கால்*

விழுந்த இடம் ~ *குருக்ஷேத்ரம் ஸ்தாணு சிவன் ஆலயம் அருகிலுள்ள பத்ரகாளீ கோவில்*

தேவியின் பெயர் ~ *சாவித்ரீ*

பைரவர் பெயர் ~ *ஸ்தாணுநாத பைரவர்*

15) பதினைந்தாம் சக்திபீடம் ~ *குவ்வூர்., ஆந்திர பிரதேசம்*

விழுந்த அங்கம் ~ இடது கன்னம்

விழுந்த இடம் ~ *ராஜமுந்திரி அருகேயுள்ள குவ்வூர் கோதாவரிக்கரை., ஆந்திர பிரதேசம்.*

தேவியின் பெயர் ~ *விஸ்வேஸீ*

பைரவர் பெயர் ~ *தண்டபாணி பைரவர்*

16) பதினாறாம் சக்திபீடம் ~ *கோலாப்பூர்., மகாராஷ்டிரா*

விழுந்த அங்கம் ~ *முக்கண்கள்*

விழுந்த இடம் ~ *கோலாப்பூர்., மஹாராஷ்ட்ரா*

தேவியின் பெயர் ~ *மஹாலக்ஷ்மீ*

பைரவர் பெயர் ~ *க்ரோதீச பைரவர்*

17) பதினேழாம் சக்திபீடம் ~ *சட்காவ்., பங்களாதேஷ்*

விழுந்த அங்கம் ~ *வலது முழங்கை*

விழுந்த இடம் ~ *பங்களாதேஷில் ஸீதாகுண்டம் அருகேயுள்ள சட்காவ் என்ற இடத்திலுள்ள சந்திரநாத் மலையிலுள்ள சந்திரசேகரர் ஆலயத்தில்*

தேவியின் பெயர் ~ *பவாநீ*

பைரவர் பெயர் ~ *சந்திரசேகர பைரவர்*

18) பதினெட்டாம் சக்திபீடம் ~ *ஸுநந்தா., பங்களாதேஷ்*

விழுந்த அங்கம் ~ *மூக்கு*

விழுந்த இடம் ~  *ஸுநந்தா நதிக்கரையில் உள்ள உக்ரதாரா தேவீ ஆலயம் - சிகார்பூ கிராமம் - பங்களாதேஷ்*

தேவியின் பெயர் ~ *ஸுநந்தா*

பைரவர் பெயர் ~ *த்ரியம்பக பைரவர்*

19) பத்தொன்பதாம் சக்திபீடம் ~ *ஸுஸீந்த்ரம்., தமிழ்நாடு*

விழுந்த அங்கம் ~ *மேல் பல்வரிசை*

விழுந்த இடம் ~ *தாணுமாலயன் கோவில் - சுசீந்தரம் - தமிழ்நாடு*

தேவியின் பெயர் ~ *நாராயணீ*

பைரவர் பெயர் ~ *ஸம்ஹார பைரவர்*

20) இருபதாம் சக்திபீடம் ~ *ஹவுரா., மேற்கு வங்காளம்.*

விழுந்த அங்கம் ~ *அன்னையின் ஹாரம்*

விழுந்த இடம் ~ ஹவுரா - க்யூல் வழியில் நல்ஹாடி இரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ள ஆலயம்.

தேவியின் பெயர் ~ *காளீகா*

பைரவர் பெயர் ~ *யோகேச பைரவர்*

21) இருபத்தோராம் சக்திபீடம் ~ *அமர்கண்ட்., மத்திய பிரதேசம்*

விழுந்த அங்கம் ~ *இடுப்பின் இடதுப் பக்கம்*

விழுந்த இடம் ~ *அமர்கண்ட் ( மத்திய பிரதேசம் ) நர்மதை உற்பத்தியாகும் குண்டம்*

தேவியின் பெயர் ~ *சோணா*

பைரவர் பெயர் ~ *சோணபத்ர பைரவர்*

22) இருபத்திரெண்டாம் சக்திபீடம் ~ *நந்திபூர்., மேற்கு வங்காளம்*

விழுந்த அங்கம் ~ *குடல்*

விழுந்த இடம் ~ *நந்திபூர் கிராமம் ஆலமரத்தடி கோவில் ( ஹவுரா - க்யூல் வழியில் சந்தியா இரயில் நிலையம் அருகில் )*

தேவியின் பெயர் ~ *காளீகா*

பைரவர் பெயர் ~ *யோகேச பைரவர்*

23) இருபத்திமூன்றாம் சக்திபீடம் ~ *பசுபதிநாத்., நேபாளம்*

விழுந்த அங்கம் ~ *முழங்கால்*

விழுந்த இடம் ~ *பசுபதிநாத் பாக்மதீ நதிக்கரையில் உள்ள குஹ்யேஸ்வரீ ஆலயம் - நேபாளம்*

24) இருபத்திநான்காம் சக்திபீடம் ~ *திரிபுரா., அஸ்ஸாம்*

விழுந்த அங்கம் ~ *வலது கால்*

விழுந்த இடம் ~ *திரிபுராவிலுள்ள ராதாக்ருஷ்ணபூர் கிராமத்தில் 2 கிமீ தொலைவிலுள்ள மலையில் - அஸ்ஸாம்*

தேவியின் பெயர் ~ *திரிபுரசுந்தரி*

பைரவர் பெயர் ~ *திரிபுரேச பைரவர்*

25) இருபத்தைந்தாம் சக்திபீடம் ~ *த்ரிஸ்ரோதா., மேற்கு வங்காளம்*

விழுந்த அங்கம் ~ *இடது கால்*

விழுந்த இடம் ~‌ *மேற்கு வங்காளம் ஜல்பாகுரி ஜில்லா சால்வாடீ கிராமத்தில் உள்ள த்ரிஸ்ரோதா நதியின் கரையில்*

தேவியின் பெயர் ~ ‌ *ப்ராம்ஹீ*

பைரவர் பெயர் ~ *அம்பர பைரவர்*

26) இருபத்தாறாம் சக்திபீடம் ~ *பஞ்சசாகரம்., ஹரித்வார்., உத்ரகாண்ட்*

விழுந்த அங்கம் ~ *கீழ் பல்வரிசை*

விழுந்த இடம் - *பஞ்சசாகரம்., ஹரித்வார்., உத்ரகாண்ட்* 

தேவியின் பெயர் ~ *வராஹீ*

பைரவர் பெயர் ~ *மஹாருத்ர பைரவர்*

27) இருபத்தேழாம் சக்திபீடம் ~ *கேது ப்ரஹ்மம்., மேற்கு வங்காளம்*

விழுந்த அங்கம் ~ *இடது கை*

விழுந்த இடம் ~ *அஹ்மத்பூர் கட்வா செல்லும் வழியில் கேதுப்ரஹ்மம் கிராமம்., மேற்கு வங்காளம்.*

தேவியின் பெயர் ~ *மஹீலா*

பைரவர் பெயர் ~ *பீருக பைரவர்*

28) இருப்பத்தெட்டாம் சக்திபீடம் ~ *அலோப்தேவீ., பிரயாகை., அலகாபாத்., உத்திர பிரதேசம்*

விழுந்த அங்கம் ~ கை விரல்கள்

விழுந்த இடம் ~ *அலோப் தேவீ - ஆலயப் பிரயாகை., அலகாபாத்., உத்திர பிரதேசம்*

தேவியின் பெயர் ~ *லலிதா*

பைரவர் பெயர் ~ *பவ பைரவர்*

29) இருபத்தொன்பதாம் சக்திபீடம் ~ *ஸோம்நாத்., குஜராத்*

விழுந்த அங்கம் ~ *வயிறு*

விழுந்த இடம் ~ *ஸோம்நாத் - குஜராத்*

தேவியின் பெயர் ~ *ஸந்த்ரபாஹா*

பைரவர் பெயர் ~ *வக்ரதுண்ட பைரவர்*

30) முப்பதாம் சக்திபீடம் ~ *மதுரா (பிருந்தாவனம்) ஆக்ரா அருகில்., உத்திர பிரதேசம்*

விழுந்த அங்கம் - கேசம்

விழுந்த இடம் - *மதுரா - பிருந்தாவன ரோட்டில் பூதேஸ்வர மஹாதேவர் ஆலயம் ( ப்ருந்தாவனத்தில் இருந்து 3 கிமீ ) மதுரா (பிருந்தாவனம்) ஆக்ரா அருகில்., உத்திர பிரதேசம்*

தேவியின் பெயர் ~ *உமா*

பைரவர் பெயர் ~ *உமேச பைரவர்*

31) முப்பத்தோராம் சக்திபீடம் ~ *உஜ்ஜையினி., மத்தியபிரதேசம்*

விழுந்த அங்கம் ~ *மேல் உதடு*

விழுந்த இடம் ~ *சிப்ரா நதிக்கரை - உஜ்ஜையின் - மத்தியபிரதேசம்*

தேவியின் பெயர் ~ *அவநதீ*

பைரவர் பெயர் ~ *லம்பகர்ண பைரவர்*

32) முப்பத்திரெண்டாம் சக்திபீடம் ~ *புஷ்கர்., ராஜஸ்தான்.*

விழுந்த அங்கம் ~ *மணிக்கட்டு*

விழுந்த இடம் ~ *புஷ்கர் ( ராஜஸ்தான் )*

தேவியின் பெயர் ~ *காயத்ரீ*

பைரவர் பெயர் ~ *சர்வானந்த பைரவர்*

33) முப்பத்துமூன்றாம் சக்திபீடம் ~ *பாட்னா., பிஹார்*

விழுந்த அங்கம் ~ *இடது கணுக்கால்*

விழுந்த இடம் ~ *படீபடனேஸ்வரீ கோவில் - மகராஜ் கஞ்சி - பாட்னா*

தேவியின் பெயர் ~ *ஸர்வானந்தகிரீ*

பைரவர் பெயர் ~ *வ்யாமகேச பைரவர்*

34) முப்பத்திநான்காம் சக்திபீடம் ~ *மானசரோவர்., திபேத்*

விழுந்த அங்கம் ~ *வலது முன் கை*

விழுந்த இடம் ~ *மானஸரோவர் ஏரி - கைலாஷ் - திபெத்*

தேவியின் பெயர் ~ *தாக்ஷாயணீ தேவீ*

பைரவர் பெயர் ~ *அமர பைரவர்*

35) முப்பத்தைந்தாம் சக்திபீடம் ~ *உச்சய்த்., மதுபானி மாவட்டம்., பிஹார்* 

விழுந்த அங்கம் ~ *இடது தோள்*

விழுந்த இடம் ~ *நேபாள எல்லையிலுள்ள ஜனக்புரியிலிருந்து 50 கிமீ தொலைவிலுள்ள உச்சய்த் ஊரிலுள்ள துர்க்கையின் ஆலயத்திலிருந்து 14 கிமீ தொலைவிலுள்ள வனதுர்க்கா ஆலயம்., மதுபானி மாவட்டம்., பிஹார்*

தேவியின் பெயர் ~ *உமா*

பைரவர் பெயர் ~ *மஹோதர பைரவர்*

36) முப்பத்தாறாம் சக்திபீடம் ~ *ஜெய்ஷோர்., பங்களாதேஷ்*

விழுந்த அங்கம் ~ *இடது முன் கை*

விழுந்த இடம் ~ *ஜெய்ஷோர் - பங்களாதேஷ்*

தேவியின் பெயர் ~ *யசோரேஸ்வரீ*

பைரவர் பெயர் ~ *சண்ட பைரவர்*

37) முப்பத்தேழாம் சக்திபீடம் ~ *குளித்தலை., தமிழ்நாடு*

விழுந்த அங்கம் ~ *வலது தோள்*

விழுந்த இடம் ~ *குளித்தலை ( அராளகேசி அம்மன் திருக்கோவில் ) தமிழ்நாடு*

தேவியின் பெயர் ~ *குமாரீ*

பைரவர் பெயர் ~ *சிவா பைரவர்*

38) முப்பத்தெட்டாம் சக்திபீடம் ~ *சித்ரகூடம்., உத்திர பிரதேசம்*

விழுந்த அங்கம் ~ *வலது மார்பு*

விழுந்த இடம் ~ *சித்ரகூடம் அருகிலுள்ள மைஹர்., உத்திர பிரதேசம்*

தேவியின் பெயர் ~ *ஷிவானி*

பைரவர் பெயர் ~ *சண்ட பைரவர்*

39) முப்பத்தொன்பதாம் சக்திபீடம் ~ *திரிகோணமலை., ஸ்ரீலங்கா*

விழுந்த அங்கம் ~ *அன்னையின் கால் சலங்கை*

விழுந்த இடம் ~ *திரிகோணமலை., ஸ்ரீலங்கா*

தேவியின் பெயர் ~ *இந்த்ராக்ஷீ*

பைரவர் பெயர் ~ *ராக்ஷேஸேஸ்வர பைரவர்*

40) நாற்பதாம் சக்திபீடம் ~ *ஒண்டால் சந்தியா., பிர்பம் மாவட்டம்., துப்ராஜ்பூர்., மேற்கு வங்காளம்.* 

விழுந்த அங்கம் ~ *நெஞ்சு*

விழுந்த இடம் ~ *ஒண்டால் சந்தியா வழியில் துப்ராஜ்பூரிலிருந்து 10 கிமீ வடக்கே பாபஹரா என்ற இடத்திலுள்ள வெந்நீர் ஊற்றுகளுக்கு அருகேயுள்ள மயானம்., ஒண்டால் சந்தியா., பிர்பம் மாவட்டம்., துப்ராஜ்பூர்., மேற்கு வங்காளம்.*

தேவியின் பெயர் ~ *மஹிஷாஸுர மர்த்தினி*

பைரவர் பெயர் ~ *வக்ரநாத பைரவர்*

41) நாற்பத்தோராம் சக்திபீடம் ~ *மணிகர்ணிகா., காசி/வாரணாசி., உத்திர பிரதேசம்*

விழுந்த அங்கம் ~ *அன்னையின் குண்டலங்கள்*

விழுந்த இடம் ~ *மணிகர்ணிகா கட்டிடத்தின் அருகேயுள்ள ஆலயத்தில்., காசி/வாரணாசி., உத்திர பிரதேசம்*

தேவியின் பெயர் ~ *விசாலாக்ஷி*

பைரவர் பெயர் ~ *கால பைரவர்*

42) நாற்பத்திரெண்டாம் சக்திபீடம் ~ *பஞ்சகுரா., மிட்னாபூர் மாவட்டம்., மேற்கு வங்காளம்*

விழுந்த அங்கம் ~ *இடது கணுக்கால்*

விழுந்த இடம் ~ *பஞ்சகுரா இரயில் நிலையத்திற்கருகே உள்ள விபாசநதிக் கரையிலுள்ள ஆலயம்., மிட்னாபூர் மாவட்டம்., மேற்கு வங்காளம்*

தேவியின் பெயர் ~ *கபாலினி*

பைரவர் பெயர் ~ *பீம பைரவர்*

43) நாற்பத்திமூன்றாம் சக்திபீடம் ~ *வைராட்., (ஜெய்பூர்)., ராஜஸ்தான்*

விழுந்த அங்கம் ~ *இடது கால் பெருவிரல்*

விழுந்த இடம் ~ *வைராட் - ஜெய்ப்பூர் அருகேயுள்ள கிராமம்., ராஜஸ்தான்*

தேவியின் பெயர் ~ *அம்பிகா*

பைரவர் பெயர் ~ *அம்ருதாக்ஷ பைரவர்*

44) நாற்பத்திநான்காம் சக்திபீடம் ~ *ஜஸிடீஹ்., டியோகர் மாவட்டம்., ஜார்கண்ட்*

விழுந்த அங்கம் ~ *இருதயம்*

விழுந்த இடம் ~ *ஹவுரா - பாட்னா வழியில் ஜஸ்டீஹ் வழியிலுள்ள வைத்யநாதர் ஆலயம்., டியோகர் மாவட்டம்., ஜார்கண்ட்*

தேவியின் பெயர் ~ *ஜெய துர்க்கா*

பைரவர் பெயர் ~ *வைத்யநாத பைரவர்*

45) நாற்பத்தைந்தாம் சக்திபீடம் ~ *பாஉர்பாக்., ஜயந்தியா மாவட்டம்., மெகாலயா*

விழுந்த அங்கம் ~ *இடது கணுக்கால்*

விழுந்த இடம் ~ *அஸ்ஸாமிலுள்ள ஷில்லாங்கிலிருந்து 52 கிமீ தொலைவிலுள்ள ஜயந்தியா மலையிலுள்ள பாஉர்பாக் என்ற கிராமம்., பாஉர்பாக்., ஜயந்தியா மாவட்டம்., மெகாலயா*

தேவியின் பெயர் ~ *ஜெயந்தீ*

பைரவர் பெயர் ~ *க்ரமதீஸ்வர பைரவர்*

46) நாற்பத்தாறாம் சக்திபீடம் ~ *திருவானைக்காவல் - திருச்சி மாவட்டம் - தமிழ்நாடு*

விழுந்த அங்கம் ~ *முகவாய்க் கட்டை*

விழுந்த இடம் - *திருவானைக்காவல் - திருச்சி மாவட்டம் - தமிழ்நாடு*

தேவியின் பெயர் ~ *அகிலாண்டேஸ்வரீ*

பைரவர் பெயர் ~ *விக்ருதாக்ஷ பைரவர்*

47) நாற்பத்தேழாம் சக்திபீடம் ~ *ஜலந்தர்., பஞ்சாப்*

விழுந்த அங்கம் ~ *இடது மார்பு*

விழுந்த இடம் ~ *ஜலந்தர் - பஞ்சாப்*

தேவியின் பெயர் ~ *திரிபுர மாலினி*

பைரவர் பெயர் ~ *பீக்ஷண பைரவர்*

48) நாற்பத்தெட்டாம் சக்திபீடம் ~ *ஜ்வாலாமுகீ., கங்ரா மாவட்டம்., ஹிமாச்சலப் பிரதேசம்*

விழுந்த அங்கம் ~ *நாக்கு*

விழுந்த இடம் ~ *ஜ்வாலாமுகீ ரோட்டிலிருந்து 21 கிமீ - கங்கா மாவட்டம் - ஹிமாச்சலப் பிரதேசம்*

தேவியின் பெயர் ~ *ஸித்திதா ( ஜ்வாலை வடிவில் )*

பைரவர் பெயர் ~ *உன்மத்த பைரவர்*

49) நாற்பத்தொன்பதாம் சக்திபீடம் ~ *ஸ்ரீசைலம்., ஆந்திர பிரதேசம்*

விழுந்த அங்கம் ~ *கழுத்தின் கீழ்பகுதி*

விழுந்த இடம் ~ *மல்லிகார்ஜூனம் - ஸ்ரீசைலம் - ஆந்திரப் பிரதேசம்*

தேவியின் பெயர் ~ *பிரம்மராம்பிகாம்பாள்*

பைரவர் பெயர் ~ *சம்பராநந்த பைரவர்*

50) ஐம்பதாவது சக்திபீடம் ~ *ஸ்ரீ பர்வதம்., ஜம்மு-காஷ்மீர்*

விழுந்த அங்கம் ~ *வலது புட்டச்சதை*

விழுந்த இடம் ~ *காஷ்மீர் - லடாக் இடையேயுள்ள ஸ்ரீ பர்வதம் - ஜம்மு-காஷ்மீர்*

தேவியின் பெயர் ~ *சுந்தரி*

பைரவர் பெயர் ~ *சுந்தரானந்த பைரவர்*

51) ஐம்பத்தொன்றாம் சக்திபீடம் ~ *ஹிஸ்கோஸ்., பாகிஸ்தான்*

விழுந்த அங்கம் ~ *தலையின் உச்சிக்குழி*

விழுந்த இடம் ~ *பாகிஸ்தான் கராச்சியிலிருந்து வடமேற்கில் ஹிஸ்கோஸ் நதிக்கரையில் பலுசிஸ்தான் லாஸ்பேஸ்தானிலுள்ள ஹிங்க்லாஜ் என்னுமிடத்தில் ஜ்வாலை ( தீப்பிழம்பு ) வடிவில் உள்ளாள்.*

தேவியின் பெயர் ~ *கோடரீ*

பைரவரின் பெயர் ~ *பீமலோசன பைரவர்*

Thursday, February 2, 2023

அஷ்ட பந்தனம்

அஷ்ட பந்தனம்:

தெய்வங்களை பீடத்தில் அசையாமல் நிறுத்தும் `அஷ்ட பந்தன மருந்தி'ல் என்னென்ன சேர்ப்பார்கள்?

அஷ்டபந்தன கலவை தயாரிப்பதற்குக் கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டு பொருள்கள் தேவை.

கோயில் எழுப்புவதற்கான இடத்தைத் தேர்வு செய்வதிலிருந்து ஆலயம் எப்படி அமைய வேண்டும் என்பது வரை பல ஆகம விதிமுறைகள் இருக்கின்றன. கோயிலைக் கட்டி முடித்த பிறகு, தெய்வ மூர்த்தங்களைப் பிரதிஷ்டை செய்வார்கள். ஒரு பீடத்தின்மீது தெய்வ மூர்த்தத்தை வைத்து, பீடத்திலிருந்து அகலாமல் இருப்பதற்காக, `அஷ்ட பந்தன மருந்து' சாத்துவார்கள். இந்த அஷ்ட பந்தன மருந்து, தெய்வ மூர்த்தத்தைப் பீடத்துடன் அழுந்தப் பிடித்துக்கொள்ளும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தெய்வ மூர்த்தங்களுக்கு அஷ்டபந்தனம் சாத்த வேண்டும் என்பது ஆகம நியதி.

`அஷ்டபந்தனம் என்றால் என்ன?’’

''கோயில்களில் அஷ்டபந்தன மருந்தை 12 வருடங்களுக்கு மாற்ற வேண்டும் என்பது ஆகம நியதி. அதன்படி அனைத்து ஆலயங்களிலும் 12 வருடங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்.

உலக உயிர்களெல்லாம் நலமாக இருக்க வேண்டுமென்றால், மூல தெய்வ மூர்த்தம், தனது ஆதார பீடத்தில் ஆடாமல் அசையாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் உலகத்துக்கும் உலகில் வாழும் மக்களுக்கும் சிறப்பு. மூலவ மூர்த்தி தொடங்கி, எல்லா தெய்வங்களின் திருமேனிகளும் பீடத்திலிருந்து அசையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த அஷ்டபந்தன மூலிகை மருந்தைச் சாத்துகிறார்கள். 

அஷ்டபந்தனம் தயாரிப்பதற்காகவே தமிழில் ஒரு வெண்பா பாடப்பட்டுள்ளது.

'கொம்பரக்குச் சுக்கான்தூள் குங்கிலியம் கற்காவி

செம்பஞ்சு சாதிலிங்கம் தேன்மெழுகு - தம்பழுது

நீக்கி எருமைவெண் ணெய்கட்டி நன்கிடித்து

ஆக்கல் அட்டபந்தனம் ஆம்'

இந்த மூலிகை மருந்து பல நாள்களானாலும் கெடாத வகையில் தயாரிக்கப்படும். அஷ்டபந்தன கலவை தயாரிப்பதற்குக் கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டு பொருள்கள் தேவை.

இந்த எட்டுப் பொருள்களைச் சேர்த்து, உரலில் இட்டு இடிக்க வேண்டும். கொம்பரக்கு தொடங்கி ஒவ்வொரு பொருளாக உரலில் இட்டு இடிக்க வேண்டும். இடிக்கும்போது எருமை வெண்ணெய்யை சிறிது சிறிதாகச் சேர்த்து இடிக்க வேண்டும். அஷ்டபந்தன மருந்து கெட்டியாக கல்லு போலவும் இருக்கக் கூடாது. குழைவாகவும் இருக்கக் கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு பதமான நிலையில் இருக்க வேண்டும். இப்படி இருந்தால்தான் ஆதாரப்பீடத்தில் இருக்கும் இறைவனின் திருமேனியை நிலைநிறுத்த வசதியாக இருக்கும்.

இந்த மூலிகை மருந்துகளைக் கலந்து இடிப்பதற்கான பாத்திரங்கள், உரல், உலக்கை ஆகியவை மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். இந்தப் பொருள்களை எந்தெந்த அளவு சேர்க்க வேண்டும், எவ்வளவு நேரம் இடிக்க வேண்டும் என்பதற்குக் கால அளவுகள் உண்டு. அஷ்டபந்தனம் தயாரிப்பவர்களின் வாக்கு, மனம், செயல் இவையாவும் இறைச் சிந்தனையிலேயே நிலைத்திருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். 

இந்த மருந்தை 100 ஆண்டுகள் வரை கெடாதவாறு தயாரிக்க முடியும். ஆனாலும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாகத் தயாரித்து, தெய்வ மூர்த்தங்களுக்கும் பீடத்துக்கும் இடையில் சாத்தி, கும்பாபிஷேகம் செய்வதென்பது நடைமுறையில் இப்போது வழக்கமாகியுள்ளது.

Friday, January 27, 2023

பிரம்ம முகூர்த்தம்

பிரம்ம முகூர்த்தம் thank FB
-----------------------------


பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணி வரையாகும்.பிரம்மனுடைய பத்தினி சரஸ்வதி தேவி விழித்துச் செயற்படும் நேரம் பிரம்மமுகூர்த்தம் என்பதும் நம்பிக்கை. இதனால் இந்நேரம் சரஸ்வதி யாமம் எனவும் அழைக்கப்படுகின்றது.

மனதின் பிரச்னைகளை அகற்றவும்இறைவனின் அன்பில் மனதை நிலை நிறுத்தவும், இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு அற்புதமான நேரம் பிரம்ம முஹூர்த்தம். இந்த பிரம்ம முஹூர்த்தம் என்பது பிரம்மா சிவபெருமானை நினைத்து அற்புத வரங்களை பெற்றதால் பிரம்ம முஹூர்த்தம் என்ற சொல் வழக்கில் வந்தது.

படைப்பு கடவுளான பிரம்மா நீண்டகாலமாக உறங்கிவிட்டதால் அவரை உறக்கத்திலிருந்து எழுப்பிய சிவபெருமான்.. இந்த கலியுகத்தை அதாவது பிரம்மாவின் இரவை பிரம்மாவின் பகல் ஆக்கவேண்டும் அதாவது சத்யுகம் என்ற உலகத்தை இந்த பூமியில் ஏற்படுத்தவேண்டும் என்று பிரம்மாவிற்கு கட்டளை இட்டார்..அதன் படி தன்னுடைய நிலையில் உறங்கி கொண்டிருந்த பிரம்மாவும் விழிப்படைந்து இறைவன் சிவபெருமானை பிரார்த்திக்க அவரிடம் வரங்களை பெற எந்த நேரம் உகந்தது என்று வினவ..

சிவபெருமானும் பூமியின் கணக்குப் படி அதிகாலை நேரம் என்னை நினைக்க என்னிடமிருந்து அளவிடமுடியாத சக்தியை பெற நினைத்த காரியத்தை சாதித்துக்கொள்ள அதிகாலை நேரத்தையும், சந்தியா காலம் எனும் சாயங்கால வேலையையும் பயன் படுத்திக்கொள்ள கட்டளையிட்டார்..பிரம்மாவும் அதன்படி பூமியின் கணக்குப்படி நாள் முழுவதும் இறைவனுடைய நினைவில் இருந்தாலும் அதிகாலை என்ற பிரம்ம முஹூர்த்தத்தையும் சந்தியா காலத்தையும் மிக சிறப்பான பயிற்சிக்காக சிவபெருமான் கட்டளைப்படி பயன்படுத்தினார்.. பிரம்மாவே இந்த அதிகாலை நேரத்தில் சிறப்பு பயிற்சி செய்ததால் அவரின் பெயராலேயே பூமியின் கணக்குப்படி அதிகாலை 4-5வரை பிரம்ம முஹூர்த்தம் என்றே அழைக்கப்படுகின்றது.

இந்த நேரத்தில் நாமும் விழித்திருந்து குளித்தோ..முடியாதவர்கள் கை,கால்களை அலம்பி பல் துலக்கி தன்னை நெற்றியின் மத்தியில் வசிக்கும் ஒரு ஒளியான ஆத்மா என்று உணர்ந்து பரமாத்மா சிவனை ஒரு உடலற்ற ஒளியாக நினைவு செய்ய பிரம்மா எந்த சக்தியை அடைந்தாரோ அப்படிப்பட்ட அளவிடமுடியாத சக்தியை ஈஸ்வரனிடமிருந்து நாமும் அடையமுடியும்.

பிரம்ம முஹூர்த்ததில் இறைவன் சிவபெருமானை நினைபவருக்கு நாள் முழுவதும் தன்னை தானாகவே அவர் நினைவுக்கு வருவார் என்பதுதான் உண்மை.

சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள அதிகாலைப் பொழுதை உஷத் காலம் என்பர். அந்த சமயத்தில் தேவர்கள், சிவபார்வதி, மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் வானமண்டலத்தில் சஞ்சரிப்பதாக ஐதீகம்.

● சூரியன் உதித்தெழுவதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு (விடியற் காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம்) முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது.

● பிரம்ம முகூர்த்தம் என்பது பிரம்மன் என்றால் நான்முகனைக் குறிக்கின்றது.

● சிவபெருமானின் பெருங்கருணையினால் தான் படைத்தற் தொழிலைப் புரியும் நான்முகன் ( பிரம்மன்) தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச் செய்து 24 கலைகளையும் படைத்தார்.

● பிரம்ம முகூர்த்ததில் திருமணம் செய்வது மேலும் பிரம்ம முகூர்த்ததில் வீட்டு கிரஹப்பிரவேசம் செய்வது போன்ற சுப காரியங்கள் நடைபெற்றால் அங்கு சுபத்தன்மை ஏற்படும். அவ்விடம் எவ்வித அமங்களமும் ஏற்படாது. மங்களம் குடிகொள்ளும். அதனால், பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் பற்றி முழுவதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்குமே இருக்கும்.

● காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே ( மரணத்திற்கு ஒத்திகை போன்றது) சற்றேறக்குறைய மறுபிறவிதானே!

● எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை சிருஷ்டி (படைத்தல்) என்று சொல்லலாம். இத்தொழிலை சிவபெருமானின் பெருங்கருணையால் செய்பவர் பிரம்மா.

● எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள். பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளை தான்.

● இந்நேரத்தில் எழுந்து குளித்து இறை வழிபாட்டைச் ( சிவவழிப்பாட்டைச் செய்வது) செய்ய வேண்டும். பிறகு நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் உடலும், உள்ளமும் உற்சாகத்துடன் இருக்கும்.

● நாம் தொடங்கும் செயல்கள் எல்லாம் வெற்றியாகத்தான் இருக்கும். பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்.

● உபாசனைக்கு காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமானதொரு கடமையாகும். இக்காலம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும் எழச் செய்கின்றது.

● மந்திரங்கள் ஜெபிப்பவனுடைய மனதிலிருந்து படிப் படியாக அவனுடைய நுண் அலைகளை ஒலி அலைகளாக மேலே எழுப்பிச் செபம் செய்பவனது மந்திர ஒலியானது வெளிப்படச் செய்கிறது. இவ்வாறு பிரம்மமுகூர்த்தத்தில் அவன் செய்யும் ஜெபம் அவன் செல்லும் இடமெங்கும் அவனை அறியாமலே நன்மைகளை விளைவிக்கின்றது.

● அதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறுவார்கள். இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

● இந்துக்கள் அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி, நீர் தெளித்து கோலமிடுவார்கள். நமது புராண இதிகாசங்களில் முனிவர்கள் அதிகாலையில் நீராடித், தியானத்தில் இருந்ததை அறிகின்றோம்.

● அவர்களது அபிமான்ய சக்தியையும் அவற்றைக் கொண்டு அவர்கள் செய்த விந்தைகளையும் ( அதிசயத்தையும், அற்புதத்தையும்) படித்திருக்கின்றோம். அவற்றை நாம் முழுமையாக நம்பாவிடினும் பிரம்ம முகூர்த்தத்திற்கு அபாரசக்தி ஒன்றுள்ளது என்பதை உணர்வு பூர்வமாக அனுபவித்து அறியலாம்.

எனவே அதிகாலை எழுந்திருக்கும்போது சில நன்மைகள் உண்டு.

 இந்த நேரத்தில் கண்டிப்பாக தூங்கக் கூடாது. தியானம், வழிபாடு போன்ற பயனுள்ள பணிகளைச் செய்யவேண்டும். இந்த நேரத்தில் செய்யும் வழிபாடு பலமடங்கு புன்ணியத்தை தரும்.

தீபம் ஏற்றுவதற்கு உகந்த நேரமாக அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் (சூரிய உதயத்திற்கு முன்) கருதப்படுகிரது. காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும். பிரம்மமுகூர்த்தத்தில் எழுந்து செயற்படும் போது மனநிலையானது ஒரு நிலைப்படுகின்றது. அதற்கு ஏற்ற காலமாக இது விளங்குகின்றது. அதிகாலையில் சூரிய வெப்பம் கிடையாது.

சந்திரனுடைய வெப்பதிட்ப குளுமையும் கிடையாது.இவை இரண்டுக்கும் மத்தியில் நிலவுவது பிரம்ம முகூர்த்தம் இந்நேரத்தில் எழுந்து ஜெபிப்பது. தியானம் செய்வது, யோகம் செய்வது, கல்வி கற்பது, வேலைகள் செய்வது சிறந்த பயனைத் தருவதோடு ஞாபக சக்தியும் விருத்தியாகும்.

இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழி பாட்டைச் செய்து மது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்
பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங் களையும் பெறலாம் என்பது ஐதீகம்.

உபாசனைக்கு காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமானதொரு கடமையாகும். இக்காலம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும் எழச் செய்கின்றது.

மந்திரங்கள் ஜெபிப்பவனுடைய மனதிலிருந்து படிப் படியாக அவனுடைய நுண் அலைகளை ஒலி அலைகளாக மேலே எழுப்பிச் ஜெபம் செய்பவனது மந்திர ஒலியானது வெளிப்படச் செய்கிறது. இவ்வாறு பிரம்மமுகூர்த்தத்தில் அவன் செய்யும் ஜெபம் அவன் செல்லும் இடமெங்கும் அவனை அறியாமலே நன்மைகளை விளைவிக்கின்றது.

அதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறுவார்கள். இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளை தான்.

மருத்துவம் நிறைந்த்த பிரம்ம முகூர்த்ம்
--------------------------------------------------------------

உடல் ஓர் அற்புத படைப்பு. அதில் ஆச்சரியப் படத்தக்க பல அம்சங்கள் உள்ளன!!

ஒவ்வொருவரின் தலையிலும் உள்ளதுதான் பினியல் சுரப்பி! கடலை உருண்டை வடிவில் இருக்கும் இந்த PINEAL GLAND பார்வை நரம்புடன் இணைக்கப் பட்டுள்ளது!!

இந்த பினியல் சுரப்பி; ஓர் அரிய பொருளை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது!!
அதுதான் மெலடோனின் (melatonin)!!
இந்த அதிசய அரிய பொருளின் பலன் மகத்தானது! புற்று நோயைக் குணப்படுத்தும் இயற்கை மருந்து இந்தப் பொருளில் இருக்கிறது.
மெலடோனின் சுரக்க வேண்டும் என்றால்; ஒரே ஒரு நிபந்தனை. இரவின் இருளாக இருக்க வேண்டும்!!

இரவின் இருளில்தான் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்கும்!!

அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பார்வை நரம்பு மூலமாக; அது இரவின் இருளை அறிந்து கொள்ளும்!!

ஒவ்வொரு நாளும் இரவு 10க்குப் பிறகு இருளில் சுரக்கும். மெலடோனின், நமது இரத்த நாளங்களில் பாய்ந்தோடும்.!!

நமது கண்கள் வெளிச்சத்தில் பட்டுக் கொண்டிருந்தால் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்காது!!

பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்க ஆர்மபித்து காலை 5 மணிக்கு நிறுத்தி விடும்!!
இரவு நீண்ட நேரம் கண் விழித்திருந்தால் நாம் புற்று நோயைக் குணப்படுத்தும் மெலடோனின் என்ற இயற்கை மருந்தை இழந்தவர்களாக இருப்போம்!!!!

எனவே இரவு முற்கூட்டியே உறங்கி அதிகாலையில் எழுவது புற்று நோயைத் தடுக்கும் என்று இன்று மருத்துவ உலகம் கூறுகிறது!!

அதே போன்று; அதிகாலையில் காற்று வெளி மண்டலத்தில் ஓஸோன் நிறைந்திருக்கும்.
ஒரு மனிதன் அதிகாலையில் எழுந்து நடமாட ஆரம்பித்தால்:; இந்த ஓஸோன் காற்றை அவன் சுவாசிப்பான்.!!

இது உடலிலுள்ள நோய்களைக் குணப்படுத்தி, நம் ஆயுளை அதிகரிக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்!!

இரவு முன்கூட்டியே உறங்குவதால்; மெலடோனின் கிடைக்கிறது!

அதிகாலையில் எழுந்து அலுவல்களைத் துவங்குவதால்; ஓஸோன் கிடைக்கிறது!!

உடலின் ஆரோக்கியம் அனைத்தும் இவற்றில் அடங்கியிருக்கிறது. அதிகாலையின் சில மணி நேரங்கள் அந்த நாளின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியவையாக இருக்கின்றன!!

அதிகாலையில் எழும்போது; நமது மூளையும், இன்னபிற உறுப்புகளும் பூரண ஓய்வு பெற்று வேலை செய்ய தயாராக இருக்கும்!!

அந்த நேரத்தில் செய்யும் பணிகள் அனைத்தும் திறமை மிக்கதாகவும், ஆற்றல் அழுத்தம் மிக்கதாகவும் திகழும்!!

Tuesday, January 24, 2023

கருட புராணம் கூறும் தீட்டு ||

|| கருட புராணம் கூறும் தீட்டு ||

தீட்டுள்ளவன் வீட்டில் தீட்டற்றவன் தெரிந்து சாப்பிட்டால் அன்றையபொழுது அவனுக்குத் தீட்டு.

தீட்டுப்போகும் தினத்தில் சுமார் காலை எட்டரை மணிக்கு (ஸங்கவ காலம்) மேல்தான் தீர்த்தமாடி தீட்டை முடிக்க வேண்டும்.

பிறப்பு, இறப்பு, மாதவிடாய் (தூரம்) இவை சூர்ய உதயத்திற்கு பதினொன்றேகால் நாழிகை(270 நிமிடங்கள்)க்கு முன் ஏற்பட்டால் முதல் நாள் கணக்கு. அதன் பிறகானால் மறுநாள் கணக்கு.

ப்ரேதத்தின் பின் போனாலும் க்ஷவரம் செய்து கொண்டாலும் இரு முறை ஸ்நானம் செய்ய் வேண்டும்.

ஸந்யாசிகளுக்கு (முன் ஆச்ரம) மாதா, பிதாக்களின் மரணத்தில் மட்டும் ஸ்நாநம்.

88 அடிகளுக்குள் பிணம் (சவம்) இருந்தால், எடுக்கும்வரை, சமைப்பது, சாப்பிடுவது கூடாது.

ஸந்யாசியின் சவமானால் அந்தப் பகுதிக்கே தீட்டுக் கிடையாது.

நகரங்களுக்கு மேற்படி தோஷங்கள் எதுவுமில்லை.

ஸ்நானம் பண்ணமுடியாத அளவிற்கு நோயுள்ள தீட்டுகாரனின் தீட்டுப்போக வேண்டுமானால், தீட்டற்ற ஒருவன் தீட்டுள்ளவனைத் தொட்டுவிட்டு தீர்த்தமாடி பின் தொட்டு தீர்த்தமாடி என பத்து முறை தீர்த்மாடவேண்டும்.

அதுபோல் நோயுள்ள தூர ஸ்த்ரீயை மற்றொருத்தி 12 முறை தொட்டு தீர்த்தமாடி வேறு உடை உடுத்தச் செய்தால் சுத்தி. இரண்டிலும் புண்யாஹவாசனம் முக்கியம்.

ச்ராத்தத்தின் நடுவில் (ச்ராத்த சங்கல்பம் ஆனபின்) தீட்டுத் தெரிந்தால் ச்ராத்தம் முடியும்வரை கர்த்தாவுக்குத் தீட்டில்லை.

வரித்தபின் போக்தா (ச்ராத்த ஸ்வாமி)க்கு தீட்டுத் தெரிந்தால் சாப்பிட்டு முடியும்வரை தீட்டில்லை.

விவாஹத்தில் உத்வாஹ சங்கல்பத்தின் பின் தீட்டுத் தெரிந்தால் சேஷ ஹோமம் வரை தீட்டில்லை.

ஸந்யாசிகளின் மரணத்தினால் அவரின் பங்காளிகளக்குத் தீட்டில்லை, அவப்ருத ஸ்நாநம் மட்டும். ராஜாங்கத்தால் கொலை தண்டனை விதிக்கப்பட்டவனுக்கு உடனே கர்மா செய்யலாம்.

துர் மரணம் செய்து கொண்டவனுக்கு 6 மாதம் கழித்து கர்மா செய்ய வேண்டும் என்பது விதி ஆயினும் 24 நாட்கள் கழித்து செய்வது என்றும் ஒரு விதி உள்ளது.

தற்செயலாய் துர்மரணம் அடைவோருக்கு தீட்டு, தர்பணம் முதலியவை உண்டு.

தற்கொலை செய்துகொண்டவனுக்கு தீட்டு, தர்பணம் இவை இல்லை.

கர்மா செய்பவனுக்கு 11ம் நாள் கர்மாவிற்குப் பின் தீட்டுப் போகும்.

கல்யாணமான பெண் இறந்தால் அவள் பிறந்த வீட்டுப் பங்காளிகளுக்கு தீட்டில்லை.

பிறப்புத் தீட்டுள்ளவனை 4 நாளைக்கு மேல் தீண்டினால் அதிகம் தோஷமில்லை.

ஒரு தீட்டுக் காரன் மற்றொரு தீட்டுக்காரனைத் தொடக் கூடாது.

தீட்டுள்ளவன் வீட்டுக்கும் அவன் சாமான்களுக்கும் தீட்டுண்டு.

பிரம்மச்சாரிகள் கர்மா செய்தால் அதனுடன் தர்பணம் (உதகதானம்) தனியாக இல்லை.

மனைவி கர்பமாக இருக்கும்போது தானம் வாங்குதல், தூரதேச யாத்திரை போதல் கூடாது.

சவத்துக்கு முன்னாலும், பக்கவாட்டிலும் போகக் கூடாது.

சஞ்சயனம் ஆனபின் துக்கம் விசாரித்தால் ஆசமனம் மட்டும் போதும்.

சிராத்த தினத்தன்று துக்கம் விசாரிக்கச் செல்லக் கூடாது.

தன் மனைவி கர்பமாய் இருக்கும்போது தாய், தந்தை தவிர மற்றவர்களின் சவத்தை சுமக்கலாகாது.

ப்ரம்மச்சாரிகள் தாய் தந்தை சவத்தைத் தவிர மற்வர்கள் சவத்தைச் சுமக்கக்கூடாது.

தீட்டுக் காரர்கள் ஆலயத்திற்குள் செல்லக் கூடாது.

தீட்டுக்காரர்களை தீட்டில்லாதவர்கள் நமஸ்கரிக்கக் கூடாது. தீட்டுக்காரரும் அப்படியே.

ஜனன, மரண தீட்டிலும் ஏகாதசி, துவாதசி விரதம் விடக் கூடாது. உபவாஸம் மட்டும், பூஜை கிடையாது.

சாவு தீட்டுக்காரர் மெத்தை போன்றவற்றில் படுக்கக் கூடாது. தினமும் தீர்த்தமாடவேண்டும்.

சிசுக்கள் இறந்தால் புதைத்த தினம் முதல்தான் தீட்டு. தீட்டில் வேறு தீட்டு சோ்ந்தால்?” பங்காளிகளைப் பொறுத்தவரையில் ஒரு தீட்டு காத்துக் கொண்டிருக்கும்போது மற்றொரு தீட்டு வந்தால் முன் வந்த தீட்டு முடியும்போது பின் வந்த தீட்டும் முடிந்துவிடும்.

உதாரணமாக 10நாள் தீட்டில் 4ம் நாள் மற்றொரு 10 நாள் தீட்டு வந்தால் முன் வந்த தீட்டின் 10ம் நாளுடன் பின் வந்த தீட்டும் முடிந்துவிடும்.

ஆனால் முன் வந்த 3 நாள் தீட்டுடன் பின் வந்த 10 நாள் தீட்டு முடியாது.

பத்துநாள் தீட்டின் இடையில் வந்த 3 நாள் தீட்டுடன் 10 நாள் தீட்டு முடியாது. 10ம் நாள்தான் சுத்தி.

பத்தாம் நாள் இரவில் வந்த புதிய பத்து நாள் தீட்டிற்கு அதிகப்படியாக 3நாள் மட்டும் காத்தால் போதும்.

ஆனால் பிறப்புத் தீட்டின் இறுதியில் வரும் பிறப்புத் தீட்டிற்காக மேலும் 3 நாள் காக்கத் தேவையில்லை.

மரணத் தீட்டு ஜனனத் தீட்டைக் காட்டிலும் பலம்

மரணத் தீட்டின்போது வந்த பிறப்புத் தீட்டு மரணத் தீட்டுடன் முடியும்.

பெற்ற குழந்தை பத்துநாள் பிறப்புத் தீட்டிற்குள் இறந்தால் அதற்காகத் தனியாகத் தீட்டில்லை. பிறந்ததிலிருந்து 10 நாள் விலகும். ஒரு வேளை 10ம் நாள் மரணமானால் மேலும் 2 நாள் அதிகரிக்கும். 10ம் நாள் இரவு ஆனால் 3 நாள்.

பங்காளிகளுக்கு மேற்படி 3 நாள் தீட்டில்லை.

அதிக்ராந்தாசெளசம் என்பது தீட்டுக்காலம் முடிந்தபின் தீட்டுப்பற்றி அறிந்தவருக்கு விதிக்கப்படுவது.

பிறப்புத் தீட்டில் அதிக்ராந்தாசெளசம் இல்லை.

பத்து நாள் தீட்டை பத்தாம் நாளுக்குமேல் 3 மாதங்களுக்குள் கேட்டால் 3 நாள் தீட்டு.

மூன்று மாதத்திற்கு மேல் 6 மாதத்திற்குள் கேட்டால் ஒன்றரை நாள்.

6 மாதத்திற்கு மேல் ஒரு வருடத்திற்குள் ஒரு நாள்.

அதன் பிறகு ஸ்னானம் மாத்திரம்.

3 நாள் தீட்டை பத்து நாட்களுக்குள் கேட்டால் 3நாள் தீட்டு. பத்து நாட்களுக்குப் பிறகு ஸ்னானம் மாத்திரம்.

1 நாள் தீட்டுக்கு அதிக்ராந்த ஆசெளசம் கிடையாது.

மாதா பிதாக்களின் மரணத்தில் புத்திரர்களுக்கும், கணவனனின் மரணத்தில் பத்தினிக்கும் எப்போது கேட்டாலும் அதிலிருந்து 10 நாள் தீட்டு உண்டு. ”தீட்டு முடிவில் யார் யாருக்கு க்ஷவரம் உண்டு?” சில தீட்டின் முடிவில் புருஷர் (ஆண்)களுக்கு ஸர்வாங்க க்ஷவரம் (வபனம்) செய்து கொண்டால்தான் தீட்டுப் போகும் என்பது சாஸ்திரம். ஸர்வாங்கம் என்பது :
தலையில் சிகை (குடுமி) தவிர்த மற்ற இடம்

முகம், கழுத்து

இரு கைகளிலும் மணிக்கட்டிலிருந்து முழங்கைக்குக் கீழ் உள்ள ஒரு சாண் இடம் தவிர்த்து மற்ற இடம்.

கழுத்துக்கீழே பாதங்கள் வரை, பிறப்புறுப்பு உட்பட பின் முதுகு தவிர்த்த மற்ற அனைத்து இடங்களிலும் உள்ள ரோமங்களை அறவே அகற்றுவது ஸர்வாங்க க்ஷவரம் ஆகும். 

கீழ்கண்ட மரண தீட்டுகளின் முடிவில் (முடிகின்ற நாள் அன்று – அதாவது பத்து நாள் தீட்டில் 10ம் நாள் காலை)ஸர்வாங்கம் அவசியம்.

இறந்த பங்காளி தன்னைவிட வயதில் பெரியவரானால். வயதில் சிறியவர்களுக்கு வபனம் தேவையில்லை ஆனால் தர்பணம் உண்டு.

மாதாமஹன், மாதாமஹீ, மாமன், மாமி, மாமனார், மாமியார் இவர்கள் மரணணத்தில் வனம் உண்டு.

இறந்தவர் பெரியவரா இல்லையா என ஸந்தேஹம் இருந்தால் வபனம் செய்து கொள்வதே சிறந்தது.

தீட்டு முடியும் தினம் வெள்ளிக் கிழமையானால் முதல்நாளான வியாழக் கிழமையிலேயே வபனம் செய்து கொள்ள வேண்டும். எக்காரணத்தாலும் வெள்ளிக்கிழமை க்ஷவரம் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ”ஜனனத்தால் (பிறப்பால்) ஏற்படும் தீட்டுகள்” கல்யாணமாகாத ஆண், பெண் இருபாலருக்கும் எந்தத் தீட்டும் இல்லை.

பிரசவத்தினால் ஏற்படும் தீட்டு பிரசவித்த பத்து நாளுக்குப் பிறகு எவரும் காக்கத் தேவையில்லை.

பெண் குழந்தையைப் பெற்றவளுக்கு 40 நாட்கள் தீட்டு

ஆண் குழந்தையைப் பெற்றவளுக்கு 30 நாட்கள் தீட்டு

பிறந்தது பெண் குழந்தையானால் கீழ்கண்டவர்களுக்கு பத்து நாட்கள் தீட்டு: குழுந்தையின் உடன் பிறந்தோர்.
மறுமனைவி(களு)க்குப் பிறந்த ஸஹோதரர்கள்
அதுபோல குழந்தையின் தகப்பனாரின் ஸஹோதரர்கள்
குழந்தையின் தகப்பனாரின் தகப்பனார்
(பிதாமஹர்) அவரின் ஸஹோதரர்கள். மேற்கண்டோர் திருமணமான ஆண்களானால் அவர்களது மனைவிகளுக்கும் அதே அளவு தீட்டு.
குழந்தை ஈன்றவளின் பெற்றோருக்கு 3 நாள் தீட்டு
குழந்தை பெற்றவளின் ஸஹோதரன், மாமா, பெரியப்பர, சித்தப்பா போன்றவர்களுக்கு தீட்டில்லை ஆயினும் அவர்களில் யாருடைய பொருட் செலவிலாவது ப்ரஸவம் ஆனால், ப்ரஸவம் எங்கு நடந்தாலும் செலவு செய்தவர்களுக்கு ஒரு நாள் தீட்டுண்டு. ”பெண்களுக்கும் மட்டும் ஏற்படும் தீட்டுகள்” ஜனனத்தில் குழந்தை பெற்றவளுக்கு மட்டும் சட்டி தொடடுதல் அதாவது சமையலறைக்கு வந்து சமையல் செய்ய வீட்டுக் காரியங்களில் அனைவருக்கும் உள்ள பத்து நாள் தீட்டு முடிந்தவுடன் ஈடுபட முடியாது. ஆண் குழந்தையானால் 30 நாளும், பெண் குழந்தையானால் 40 நாளுக்குப்பிறகே வீட்டுக் காரியங்களில் ஈடுபட முடியும்.

இனி மரணத்தினால் பெண்களுக்கு மட்டில் (கணவர் மற்றும் கணவர் குடும்பத்தாருக்குக் கிடையாது) ஏற்படும் தீட்டுகள் விபரம் கீழ்வறுமாறு —
பெண்களுக்கு திருமணத்தின் மூலம் கோத்திரம் வேறு படுகிறது. கணவனின் கோத்திரத்தை (சந்ததியைச்) சேர்ந்தவர்களின் பிறப்பு இறப்பே அவளுக்கும் உரியதாகும். ஆயினும் பிறந்தகத்தைச் சேர்ந்த சிலரது மரணத்தினால் பெண்களுக்கு மட்டும் 3 நாள் வரை தீட்டு சம்பவிக்கும் இந்த தீட்டு அவர்களுடைய கணவருக்குக் கிடையாது. தூரமான ஸ்த்ரீ தனித்திருந்து தீட்டுக் காப்பது போல இதை அவள் மட்டும் காக்க வேண்டியது.

பெண்களின் கீழ்க்கண்ட உறவினரின் மரணத்தில் அவளுக்கு மட்டும் 3 நாள் தீட்டு: உபநயனமான உடன்பிறந்த ஸஹோதரன்

உபநயனமான மருமான் (ஸஹோரதன் பிள்ளை)

உபநயனமான ஸஹோதரியின் பிள்ளை

இளைய அல்லது மூத்த தாயார் (தந்தையின் வேறு மனைவிகள்)

பக்ஷிணீ என்பது இரண்டு பகலும் ஓர் இரவும் அல்லது இரண்டு இரவும் ஒரு பகலும் கொண்ட நேரம். பகலின் அல்லது இரவின் கடைசீ பகுதியில் அறியப்பட்டாலும் அந்த பொழுது தீட்டில் கழிந்துவிட்டதாகவே பொருள்.
கீழ்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் மரணத்தினால் பெண்களுக்கு பக்ஷிணீ தீட்டு. (ஒன்றரை நாள்) தந்தையுடன் பிறந்த பெரியப்பா, சித்தப்பா

தாயுடன் பிறந்த சித்தி, பெரியம்மா

தாயின் ஸஹோதரர்கள் (மாதுலன்)

தந்தையின் ஸஹோதரிகள் (அத்தை)

மேல் நான்கு வகையினரின் பெண்கள், பிள்ளைகள்

தந்தையின் தந்தை – பிதாமஹன்

தந்தையின் தாய் – பிதாமஹி

தாயின் தந்தை – மாதாமஹன்

தாயின் தாய் – மாதாமஹி

உடன் பிறந்த ஸஹோதரி

ஸஹோதரியின் பெண்கள்

மருமாள் (ஸஹோதரனின் பெண்)

கீழ்கண்டவர்கள் உபநயனமான ஆண், விவாஹமான பெண் மரணத்தால் பெண்களுக்கு மட்டும் 1 நாள் தீட்டு. தாயின் மூத்தாள் அல்லது இளையாள் (ஸபத்னீ மாதா)குமாரன்

ஸபத்னீ மாதா புத்ரீ (குமாரத்தி)

ஸபத்னீமாதா ஸஹோதர, ஸஹோதரிகள்

ஸபத்னீமாதா பிள்ளையின் பிள்ளை, பெண்

ஸபத்னீ மாதா பெண்ணின் பிள்ளை, பெண்

ஸபத்னீமாதா ஸஹோதரியின் பிள்ளை,பெண் ”மரணத்தினால் ஏற்படும் தீட்டுகள்” மரணத்தினால் ஏற்படும் தீட்டுகள் ஒருநாள், ஒன்றரை நாள், மூன்று நாள், பத்து நாட்கள் என நான்கு வகைப்படும். அவை தனித்தனியாக பிரித்து கீழே வகைப்படுத்தி வழங்கப்பட்டுள்ளன. முதலில் பத்துநாளில் ஆரம்பித்து, பின் மூன்று நாள், ஒன்றரை நாள், ஒரு நாள் என எந்தப் பகுதியில் தங்களுடைய உறவு முறை வழங்கப்பட்டுள்ளது என தீர்மானித்துக்கொள்ளவும். சில சமயம் இருவிதமான உறவு முறைகள் இருக்கலாம். அப்படி இருக்கும்போது அதிகப்படியான தீட்டு எந்த உறவினால் ஏற்படுகிறதோ அந்தத் தீட்டையே அநுஷ்டிக்கவேண்டும்.
10 நாள் தீட்டு பங்காளிகளில் யார் ஒருவர் இறந்தாலும் 7 தலை முறைகளுகு்கு உட்பட்ட அனைத்து ஆண்கள் மற்றும் அவர்கள் மனைவிகளுக்கும் 10 நாள் தீட்டு உண்டு. பிறந்து பத்து நாட்களே ஆன புருஷ (ஆண்)குழந்தை இறந்தால் கீழ்க்கண்டவர்களுக்கு பத்து நாள் தீட்டு.
இறந்தவர் (குழந்தை)யின் தந்தை

தாய், மற்றும் மணமான ஸஹோதரார்கள்

மேற்படி இறந்தது மணமாகாத ஒரு பெண் (குழந்தை) ஆனாலும் மேற்கண்ட அனைவருக்கும் 10 நாள் தீட்டு.

7 வயதுடைய உபநயனம் ஆன பையன் இறந்தால் பங்காளிகள் அனைவருக்கும் 10 நாள் தீட்டு. 7 வயதுக்கு மேல் இறந்தது ஆண் ஆனால் உபநயனம் ஆகியிருந்தாலும் இல்லாவிட்டாலும் பங்காளிகள் அனைவருக்கும் 10 நாள் தீட்டு. 3 நாள் தீட்டு கீழ்க்கண்ட உறவினர்களின் மரணத்தில் ஆண்களுக்கும் அவர்களுடைய மனைவிகளுகு்கும் 3 நாள் தீட்டு. தாயின் தந்தை (மாதாமஹர்)

தாயின் தாய் (மாதாமஹி)

தாயின் ஸஹோதரன் (மாதுலன்)

மாமன் மனைவி (மாதுலானி)

மாமனார்

மாமியார்

தாயின் உடன் பிறந்த ஸஹோதரி (சித்தி,பெரியம்மா)

தந்தையின் ஸஹோதரிகள் (அத்தைகள்)

ஸஹோதரியின் மகன் (உபநயனமானவன்)மருமான்

உபநயனமான பெண்வயிற்றுப் பேரன்(தெளஹித்ரன்)

ஏழு தலைமுறைக்கு மேற்பட்ட பங்காளிகள் (ஸமானோதகர்கள்)

கல்யாணமான பெண்

கல்யாணமான ஸஹோதரி

ஸ்வீகாரம் போனவனைப் பெற்றவள் (ஜனனீ)

ஸ்வீகாரம் போனவனை ஈன்ற தந்தை (ஜனக பிதா)

ஸ்வீகாரம் போன மகன் (தத்புத்ரன்)

7 வயதுக்கு மேற்பட்ட கல்யாணமாகாத பங்காளிகளின் பெண்.

2 வயதுக்கு மேற்பட்ட ஆனால் உபயநயனமாகாத பங்காளிகளின் ஆண் பிள்ளைகள்.

7 தலைமுறைக்கு மேற்பட்ட பங்காளிகள். பக்ஷிணீ பக்ஷிணீ என்பது இரண்டு பகலும் ஓர் இரவும் அல்லது இரண்டு இரவும் ஒரு பகலும் கொண்ட நேரம். பகலின் அல்லது இரவின் கடைசீ பகுதியில் அறியப்பட்டாலும் அந்த பொழுது தீட்டில் கழிந்துவிட்டதாகவே பொருள். பகலில் அறியப்பட்டு பகல், இரவு, மறுநாள் பகலில் தீட்டு முடிந்துவிட்டாலும் மறுநாள் காலையிலேயே ஸ்னானத்திற்குப் பிறகு தீட்டுப் போகும்.
கீழ்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் மரணத்தினால் ஆண்களுக்கு பக்ஷிணீ தீட்டு. (ஒன்றரை நாள்). அத்தையின் பிள்ளை அல்லது பெண்

மாமனின் பிள்ளை அல்லது பெண்

தாயின் ஸஹோதரியின் பெண்கள்-பிள்ளைகள்

தன்னுடைய ஸஹோதரியின் பெண்

தன் ஸஹோதரனின் மணமான பெண்

சிற்றப்பன், பெரியப்பன் பெண்கள்

தன் பிள்ளை வயிற்றுப் பேத்தி (பெளத்ரீ)

பெண் வயிற்றுப் பேத்தி (தெளஹித்ரி)

உபநயனமாகாத பெண் வயிற்றுப் பிள்ளை (தெளஹித்ரன்)

உபநயனமாகாத மருமான் (ஸஹோதரி புத்ரன்)  கீழ்க்கண்டோர் மரணத்தில் புருஷர்களுக்கு ஒரு நாள் தீட்டு. (இளைய, மூத்தாள் தாயார்களுக்கு ஸபத்னீ மாதா என்று பெயர்). ஸபத்னீ மாதாவின் ஸஹோதரன், ஸஹோதரி

ஸபத்னீ மாதாவின் பெண் மற்றும் மேற்சொன்ன 3வகை உறவினரின் பெண்கள் பிள்ளைகள்.

ஸபத்னீ மாதாவின் தாய், தந்தை

ஸபத்னீ மாதாவின் பெரியப்பா, சித்தப்பா

கல்யாணமாகாத 6 வயதுக்குட்பட்ட (2 வயதுக்கு மேற்பட்ட) பங்காளிகளின் பெண்.

ஸ்வீகாரம் சென்ற ஆணின் பிறந்தகத்தில் உடன் பிறந்த (முன் கோத்ர) ஸஹோதரர்கள்

ஆறு மாதத்திற்கு மேற்பட்ட இரண்டு வயதிற்குட்பட்ட பங்காளிகளின் ஆண் குழந்தை.

கருட புராணம்

ஜெய் ஸ்ரீராம்.
ஸர்வம் கிருஷ்ணார்பணம்.
Fb

Friday, January 20, 2023

விதவை பெண்களுக்கு சனாதனம் அளித்து இடம்

விதவை பெண்களுக்கு சனாதனம் அளித்து இருந்த மிக மிக உயரிய இடம் பற்றிய எனது இனிய நண்பர் - அனீஸ் கிருஷ்ணன் நாயர் - (இவர் மலையாள நாயர் குடியை சேர்ந்தவர் ஆக பிறந்து இருப்பினும் - இவரது ஆழ்ந்த சாஸ்திர புலமையை கண்டு - வட மொழி அறியாத நான் சொன்னால் அபத்தம் - என்னிடம் சிரித்து கொண்டே சொன்னவர் - வியாசராஜா மட பீடாதிபதியும் - திருப்தி வேத பாடசாலை தலைவராகவும் பல பெரிய வேத பீடங்களை அலங்கரித்த - ஸ்ரீ  ஸ்ரீ 1008 ஸ்ரீ வித்யா ஸ்ரீஷ தீர்த்த சுவாமிஜிகள் - நாங்கள் இருவரும் அவரின் ஸ்ரீரங்க விஜயத்தில் பேசும் பொது - வியந்து இவ்வளவு சாஸ்திர விற்பன்னரை கண்டது மகிழ்ச்சி என்று என்னிடம் சொன்னார் !!! 

====================================

விதவைகள் பற்றி காஞ்சி சங்கராச்சாரியா - பெரியவர் சொன்ன பற்றிய செய்தி - அதற்கு மறுப்பு என்கிற விசயத்தை பற்றிய பதிவு இது - சங்கர மட விஸ்வாசிகள் கூட இவ்வளவு தெளிவாக எழுத முடியாது - படித்து பாருங்கள் 

==================

மத்யமர் குழுவில் கு.பி (மகளிர் பிரிவு) மஹாபெரியவரை திட்டித்தீர்த்துக்கொண்டிருந்தனர் . 

பெரியவர் சிலையை ஆகமக் கோவில்களில் வைக்கக் கூடாது என்று நான் சொல்லும் போதெல்லாம் வந்து தகராறு செய்யும் " பெரியவர் விசுவாசிகள்" கும்பலைச்சார்ந்த எவனாவது விளக்கம் எழுதுவான் என்று பார்த்தேன் .ப்ச் . அவர்கள் என்ன நம்மைப் போல வெட்டியாக வா இருக்கிறார்கள் ? பெண்டாட்டியையும் பெண்பிள்ளையும் வேலைக்கு அனுப்பி திரட்டிய பணத்தில் தண்ணியடித்துக் கொண்டிருப்பார்கள் அல்லது ஏதாவது நிறுவனத்தில் வாடிக்கையாளர் கணக்கில் கும்மாளம் அடித்துக் கொண்டிருப்பார்கள் .

தேவ்ராஜ் அமெரிக்காவிலோ மயிலாப்பூரிலோ லோஷன் தடவி முகத்தை பராமரித்துவிட்டு, நாளை அமாவாசை என்பதால் இன்று இரவே முகத்தை மொழுங்க சிரைத்து விட்டு  நிம்மதியாக கண்ணயர்ந்திருப்பார் .

ஆகவே  வேறு வழியே இல்லாததால் நானே பதில் எழுதினேன் .

//
மஹா பெரியவர் என்று அழைக்கப்படும் காஞ்சி மடாதீசர் சந்திரசேகர சரஸ்வதி குறித்து ஒரு பதிவை ஒரு உறுப்பினர் எழுதியிருந்தார் .மஹா பெரியவர் சகேசி விதவைகளை பார்க்க மாட்டார் என்பதை அடிப்படையாகக் கொண்ட பதிவு (இதைக்கூட தெளிவாக புரிந்து கொள்ளாமல் அவர் விதவைகளையே பார்க்க மாட்டார். ஏன் என்றால் விதவைகள் அமங்கலிகள் ; விதவைகளுக்கு மன சஞ்சலம் வரும் .அவர் அம்பாள் உபாசகர் என்பதால் .....என்று ஏகப்பட்ட விளக்கங்கள்) .

குருவின் தேவை குறித்து பலரும் எழுதியிருந்த பதிவுகளுக்கு எதிராக  இப்பதிவு வந்தது என்று எண்ணுகிறேன் . இது தொடர்பாக சில விளக்கங்களை சொல்லலாம் என்று எண்ணுகிறேன் .

அ) வைதவ்ய தீக்ஷை என்பது துறவறத்திற்கு சமமமானது .துறவிகளின் வாழ்வும் வைதவ்ய தீக்ஷை எடுத்துக் கொண்டவர்களது வாழ்வும் ஏறத்தாழ ஒன்று தான் .தினசரி மூன்று / இரண்டு அல்லது குறைந்த பட்சம் ஒருமுறையாவது முழுமையான குளியல் . ஜபம் ; சூரியாஸ்தமனத்திற்கு பிறகு உணவு உண்பதில்லை என்ற நியமம்

ஆ) 30/40 வருடங்களுக்கு முன்பு வரை துறவியும் விதவையும் ஒரு வகையான காவி + சிவப்பு கலந்த உடையைத்தான் அணிந்து வந்தார்கள் .வெள்ளை ஆடை வாங்கி அதில் 10/20 நாட்களுக்கு ஒரு முறை காஷாயம் முக்கி அணிந்து கொள்வார்கள் .இப்போது பல  துறவிகள் ஆயத்த காவி வேஷ்டிகளை பயன்படுத்துகிறார்கள் 

இ) பிராமணனுக்கு பிரதானம் சிகையும் பூணூலும் . ராமானுஜ வைணவம் தவிர்த்து ஏனைய மரபுகளில் துறவறத்தின் போது சிகையும் பூணூலும் நீக்கப்டும் .அதே போல வைதவ்ய தீக்ஷை எடுத்துக்கொள்ளும் கணவனை இழந்த பெண்கள் தாலியையும் கேசத்தையும்  நீக்கி கொள்வார்கள் .துறவிக்கும் விதவைக்கும் தலை மொட்டை தான் .தினசரி மூன்று முறை குளிப்பதற்கு இது தான் வசதி .இருவருக்கும் கடும் உணவு நிபந்தனைகளும் ஆச்சார நிபந்தனைகளும் உண்டு .

ஈ) துறவியின் நோக்கமும் விதவையின் நோக்கமும் முக்தி மட்டுமே .அவர்களுக்கு லௌகீக நோக்கங்கள் இல்லை .

உ) ஒரு காலத்தில் துறவிகளுக்கும் விதவைகளுக்கும் சமமான அளவு மரியாதை கொடுக்கப்பட்டது .நல்ல மடி ஆச்சாரம் உள்ள விதவைகளுக்குத்தான் பல நேரங்களில் மடாதிபதிகள் முதல் தீர்த்தத்தை வழங்கினார்கள் .

மாத்வ விதவை ஒருவர் ஒழுங்காக ஏகாதசி விரதம் இருப்பதால் தான் மழை பொய்க்காமல் பெய்கிறது என்பாராம் மஹா பெரியவர் . தனது தவத்தை விட அந்த விதவையின் ஆச்சாரத்திற்கு, ச்ரத்தைக்கு , வைராக்கியத்திற்கு அதிக முக்கியத்துவத்தை கொடுத்தார் பெரியவர் .

ஊ) கணவனை இழந்த மனைவிக்கு லௌகீக கடமைகள் ஏதும் இல்லை . அதனால் அவள் ஆன்மீக சாதனை செய்ய வேண்டும் என மதம் சொன்னது .இதே விதிதான் மனைவியை இழந்த கணவனுக்கும் .அவனை விதுரன் / அபத்னீகன் என்று சாத்திரம் சொல்கிறது 

.அவனும் துறவறம் ஏற்க வேண்டும் என்று நூல்கள் சொல்கின்றன . மனைவியை இழந்தவன் அநாச்ரமி ; அவனுக்கு தானம் கொடுக்கக்கூடாது ; அவனிடம் ஆசிர்வாதம் வாங்கககூடாது ; அவனுக்கு யாகங்களில் பங்கில்லை ; அவன் ஒற்றை பிராமணன்; சில அர்ச்சக மரபுகளில் திருமணமாகாதவனும் மனைவியை இழந்தவனும் தெய்வத்திருமேனியை தீண்டக் கூடாது என்ற விதி இருக்கிறது .

அவன் முக்கியின் பாதையில் செல்ல வேண்டும் என்று புனித நூல்கள் சொல்கின்றன . துறவற வழக்கம் இல்லாத யாகங்களை இறக்கும் வரைக்கும் செய்ய வேண்டிய பூர்வ மீமாம்சக பிரிவை சார்ந்தவனுக்கு தான் நியாயத்திற்கு மறுமணம் .பிறர் எல்லாம் பெண்டாட்டி போன பிறகாவது வைராக்யத்தை கைக்கொள்ள வேண்டும் என்பதே விதி . ஆனால் விதவிலக்கை ஆண்கள் தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்தினர் .

எ ) நிவர்த்தி மார்க்கத்தில் இருக்கும் விதவைகள் மற்றும் சாமியார்கள் மீது  ப்ரவர்த்தி மார்க்கத்தில் இருக்கும் கருஹஸ்தர்களுக்கு என்றுமே விலக்கம் இருந்தது .சாமியார்களுடன் சுற்றும் சம்சாரியும் உருப்பட மாட்டான் ; சம்சாரியுடன் சுற்றும் சாமியாரும் உருப்பட மாட்டான் என்பார்கள் . சில வீடுகளில் சாமியார்கள் வந்து போனால் கழுவி துடைக்கும் வழக்கம் இருந்தது. ஆக சாமியார்களையும் விதவைகளையும் சம்சாரிகள் அமங்கல வஸ்துக்களாகத்தான் கண்டனர் . இதில் எப்போது சாமியார் மங்கல ரூபமாகவும் விதவை மட்டும் அமங்கலமாகவும் மாறினாள் என்பது தெரியாது .
ஏ) பிரச்சனை எங்கு வந்தது? பாட்டி செத்த பிறகு தாத்தா மைனராக சுற்றினால் யாருக்கும் பிரச்சனை இல்லை ; ஆனால் அத்தான் இறந்த பிறகு அக்கா வண்ண ஆடை அணிந்தால் மறுமணம் குறித்து யோசித்தால் தம்பிக்கு மான பிரச்சனை . ஜாதிக்கு ஒழுக்க பிரச்சனை .ஆணோ பெண்ணோ அனைவருக்கும் வைராக்யம் இருக்க வேண்டும் என்பதில்லை .ஒரு சிலருக்கு வைராக்யம் இருக்கும் ; ஒரு சிலருக்கு வைராக்யம் இருக்காது . இருப்பவர்களை போற்ற வேண்டும் ; இல்லாதவர்களை விட்டு ஒதுங்கி விட வேண்டும் . சாத்திரத்தில் பாகுபாடு இல்லை . சமூகத்தில் தான் உண்டு . அந்த சமூக பாகுபாட்டால் தான் பிரச்சனை .

ஐ) ஒரு உதாரணத்தை சொல்கிறேன் .வறட்டு ஆச்சாரத்திற்கு பெயர் போன ஒரு மாத்வ நிறுவனம் உண்டு .அதன் சிஷ்யர்களுக்கு தங்கள் சாமியாரின் வறட்டு ஆச்சாரத்தின் மீது மிகப்பெரிய பிரமிப்பு உண்டு . பாரம்பர்யமோ இன்னபிற பெருமைகளோ  சொல்லத்தக்க மஹான்களோ இல்லாததால் இந்த வறட்டுத்தனத்தையே இவர்கள் பெரும் ஆபரணமாக அணிந்து வந்தனர் . ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆஷாட தசமி அன்று சமூக ஊடகங்களில்  மேற்படி நிறுவனத்தின் சிஷ்யர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டனர். தங்கள் சாமியார் ஆஷாட ஏகாதசி அன்று எந்த சகேசி விதவைக்கும் (தலையை மழிக்காத விதவை) தப்த முத்திரை (சங்கு சக்ர தாரணம் ) வழங்க மாட்டார் என்று பெருமையாக அறிவித்தனர் 

உண்மையில் சகேசி விதவைகள் இவர்களது லூசுத்தனங்கள் தெரிந்து அந்த அமைப்பு இருக்கும் தெருவிற்கு கூட செல்ல மாட்டார்கள் .இருந்தாலும் தங்களது சாமியாரின் கடும் நியமத்தை பறைச்சாற்ற மேற்படி கும்பல் செய்த வேலை இது. சாமியாருக்கு தெரியும் என்று தோன்றவில்லை .செய்தி பற்றிக்கொண்டது .பல விதமான வாத பிரதிவாதங்கள் நடந்தன;

 நான் அவர்கள் பதிவில் ஒரு கருத்தை சொன்னேன் ."சகேசி விதவைகளுக்கு முத்திரை கொடுக்கக்கூடாது என்பதை ஆதரிக்கிறேன் .ஆனால் அதே போல சிகை இல்லாத ஆண்களுக்கும் முத்திரை கொடுக்கக்கூடாது . சிகை இல்லாமல் இருப்பதும் பெரும்பாவம் அல்லவா ?" என்று கேட்டேன் . சிகை வைத்தவனுக்கு மட்டும் தான் முத்திரை என்றால் வசூல் என்னவாவது? ஆகையால் அந்த பதிவு காணாமல் போனது 🙂 அவ்வளவு தான் விஷயம் .

ஒ) சகேசி விதவைகளை மஹாபெரியவர் பார்க்க மறுத்தது இம்மியளவும் தவறில்லை என்றே நான் நினைக்கிறேன். சகேசி விதவைகள் எதற்கு மடத்திற்கு செல்லவோ சாமியாரை பார்க்கவோ விரும்புகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை .வைராக்யம் இத்யாதிகள் கைகூடாமல் வேடிக்கை பார்க்கவா செல்கிறார்கள் ? வாசிப்பதில் விருப்பமே இல்லாதவர்களை நூலகத்தில் பொழுது போக்க விட்டால் என்னவாகும்?

ஓ) அவரவர் விஷயத்தில் மஹாபெரியவர் இன்னமும் கொஞ்சம் கருணை காட்டியிருக்க வேண்டும் என்று அனைவரும் எண்ணுகிறார்கள் .மஹாபெரியவரே சொன்னது போல அவனவன் கொஞ்சம் கொஞ்சமாக மீறத்தொடங்கினால் தர்மம் என்று ஏதும் மிஞ்சாது .சிலருக்கு முடியுடன் இருக்கும் விதவையை பார்க்க மறுப்பது மனதை புண்பட செய்யும் சிலருக்கு மடாதிபதி பிராமணராக இருப்பது உறுத்தும் .சிலருக்கு மடத்தில் இடியாப்பம் பாயா கிடைக்காதது மன வருத்தத்தை தரும் .சிலர் மடத்திற்கு ஆகும் செலவில் எத்தனை பள்ளிக்கூடங்கள் நடத்தலாம் என்று புண்படுவர் .இப்படியே போனால் மடம் என்பதே இருக்காது.

ஒள) அபத்னிகர்களை மஹாபெரியவர் எவ்வாறு எதிர்கொண்டார் என்று தெரியவில்லை .என்னை கேட்டால் சிகை இல்லாதவர்களை , மீசை வைத்தவர்களை , ஸ்ம்ருதி விரோதமான, வர்ண விரோதமான ஜீவன உபாயங்களை கொண்டவர்களை எல்லாம் மடத்திற்குள் அவர்  விடாமல் இருந்திருக்க வேண்டும். அந்த அளவு கடுமையாக அவர் இருந்திருந்தால் இந்த விவாதமே நடந்திருக்காது .ஒரு சிலர் இன்று அவர் பெயரைச் சொல்லி வசூல் வேட்டை கோவில் ஆக்கமிப்பு போன்றவற்றில் ஈடுபட்டிருக்கவும் மாட்டார்கள் .
//

நன்றி .... Bcak Nayar 

விஜயராகவன் கிருஷ்ணன்
Fb